IPL 2025-Rohit Sharma: ரோகித் சர்மாவுக்காக ரூ.50 கோடி.. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் என்ன செய்கிறது?

First Published | Aug 30, 2024, 12:19 PM IST

IPL 2025-Rohit Sharma: ஐபிஎல் 2025 ல் ரோகித் சர்மாவை த‌க்க வைத்துக் கொள்வதற்காக எல்எஸ்ஜி ரூ.50 கோடி செலவு செய்யப்போவதாக வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா இதுகுறித்து பதிலளித்துள்ளார்.
 

ஐபிஎல் 2025

IPL 2025-Rohit Sharma: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்‌எஸ்ஜி) இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கானை அணியின் புதிய ஆலோசகராக நியமித்துள்ளதாக அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார். இந்த முடிவு வரவிருக்கும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் லக்னோ அணியின் உத்தி, உயர்மட்ட வீரர்களின் எதிர்காலம் குறித்த யூகங்களை மேலும் அதிகரித்துள்ளது. 

ரோகித் சர்மா

இதே சமயத்தில் கேஎல் ராகுலை அணியில் தக்கவைத்துக்கொள்வார்களா? இல்லையா? அணியில் இருந்தால் வீரராக இருப்பாரா? அல்லது கேப்டனாக தொடர்வாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முனொபு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேஎல் ராகுல் அணியின் அசைக்க முடியாத சொத்து என்று கூறினார். ஆனால், அவர் தக்க வைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதே வரிசையில் லக்னோ அணியை பற்றிய மற்றொரு செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அது என்னவென்றால்.. இந்திய சாம்பியன் கேப்டன் ரோகித் சர்மாவை எல்எஸ்ஜி அணி தட்டித்தூக்க சிறப்பு உத்திகளை வகுத்து வருவதாகவும், வரவிருக்கும் மெகா ஏலத்தில் ரோகித் சர்மாவை தட்டித்தூக்குவதற்காக ரூ.50 கோடிகளை தனது பர்ஸில் வைத்திருப்பதாகவும் வதந்திகள் வலுத்து வருகின்றன. 

Latest Videos


கேஎல் ராகுல்

லக்னோ அணி ஒரே ஒரு வீரருக்காக ரூ.50 கோடிகளை தனியாக பிடித்து வைத்துள்ளதாக வதந்திகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன. தற்போது ரோகித் சர்மா மும்பை அணியில் உள்ளார். அவருக்காக பல பிரான்சைசிகள் போட்டி போடுகின்றன. இருப்பினும், மும்பை அணி ரோகித் சர்மாவை இன்னும் விட்டுவிடவில்லை. கடந்த சீசனில் கேப்டன்சி பொறுப்பில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கிய மும்பை அணி ரோகித்தை தக்க வைத்துக்கொள்ளுமா? அல்லது விட்டுவிடுமா? என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. 

ரோகித் சர்மா, ஐபில் 2025,

லக்னோ அணி ரோகித் சர்மாவை தங்கள் அணியின் கேப்டனாக நியமிக்க பார்த்து வருவதாக வெளியாகி வரும் செய்திகள் குறித்து அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா சமீபத்தில் பதிலளித்தார். ரோகித் சர்மாவை தட்டித்தூக்குவதற்காக எல்எஸ்ஜி 50 கோடி ரூபாய்களை ஒதுக்கி வைத்துள்ளது என்ற செய்திகளை அவர் வதந்திகள் என்று குறிப்பிட்டார். சஞ்சீவ் கோயங்கா இந்த யோசனையை ஆதாரமற்றது என்றும், இது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றும் தெரிவித்தார்.

ரோகித் முதல் ரிஷப் வரை

"ரோகித் சர்மா ஏலத்தில் நுழைகிறாரா இல்லையா என்பது கூட தெரியவில்லை. உங்களுக்கு தெரியுமா? இதெல்லாம் தேவையற்ற விவாதம்.. இதெல்லாம் மும்பை இந்தியன்ஸ் ரோகித் சர்மாவை விடுவிக்கிறதா இல்லையா என்பதை பொறுத்தது. ரோகித் ஏலத்திற்கு வந்தாலும்.. உங்கள் பர்ஸில் 50 சதவீதத்தை ஒரே வீரருக்காக செலவு செய்தால் மீதமுள்ள வீரர்களை எப்படி வாங்குவீர்கள்?" என்று கோயங்கா சிரித்தபடி பதிலளித்தார்.

ரோகித் சர்மா

மேலும், "அனைவரும் சிறந்த கேப்டன், சிறந்த வீரர்களை அணியில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இருப்பினும், இது விரும்புவது பற்றியது அல்ல. இது உங்கள் பர்ஸில் எவ்வளவு உள்ளது? அதைக் கொண்டு நீங்கள் என்ன செய்ய முடியும்? என்பதை பொறுத்தது. ஒவ்வொரு பிரான்சைசிக்கும் அதே ஆசை இருக்கும்" என்று அவர் கூறினார். ரோகித் சர்மா போன்ற திறமையான வீரரை வாங்குவது எந்த அணிக்கும் ஒரு சொத்தாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர் இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்குவது சாத்தியமில்லை என்று சஞ்சீவ் கோயங்கா தெரிவித்தார்.

click me!