லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் திக்வேஷ் சிங் ரதி ஒரு போட்டியில் விளையாட பிசிசிஐ அதிரடி தடை விதித்துள்ளது. ஏன் இந்த தடை? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஸ்பின் பவுலர் திக்வேஷ் ரதி சிங் ஒரு போட்டியில் விளையாட பிசிசிஐ அதிரடி தடை விதித்துள்ளது. ஐபிஎல்லில் நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் லக்னோ இளம் வீரர் திக்வேஷ் சிங் ரதிக்கும், அபிஷேக் சர்மாவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
25
அபிஷேக் சர்மா-திக்வேஷ் சிங் ரதி மோதல்
அதாவது திக்வேஷ் சிங் ரதி பந்தில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்த உடன் திக்வேஷ் சிங் ரதி தனது வழக்கமான நோட் புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் அபிஷேக் சர்மாவை வெளியே செல்லும்படி ஆக்ரோஷமாக சைகை காட்டினார்.
இதனால் கோபம் அடைந்த அபிஷேக் சர்மா திக்வேஷ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்பு இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்படும் நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து போட்டி நடுவர்களும், லக்னோ வீரர்களும் இதில் தலையிட்டு மோதலை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
35
திக்வேஷ் சிங் ரதி 1 போட்டியில் விளையாட தடை
இந்த விவகாரத்தில் திக்வேஷ் சிங் ரதி மீதே முழு தவறும் இருப்பதாகவும், அவர் தொடர்ந்து இதேபோல் நோட் புக் கொண்டாட்டம் என்ற பெயரில் எதிரணி வீரர்களை வம்பிழுத்து வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினார்கள்.
இந்த நிலையில், நேற்று அபிஷேக் சர்மாவுடன் சண்டை போட்ட திக்வேஷ் ரதி ஒரு போட்டியில் விளையாட பிசிசிஐ தடை விதித்துள்ளது.திக்வேஷ் ரதி நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றுடன் மூன்றாவது முறையாக விதிமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சீசனில் பிரிவு 2.5 இன் கீழ் இது அவரது மூன்றாவது லெவல் 1 குற்றமாகும். ஏற்கெனவே அவர் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான போட்டியில் இரண்டு டெமெரிட் புள்ளிகள் (தகுதியிழப்பு புள்ளிகள்) பெற்றிருந்தார்.
இப்போது அவர் ஒரு போட்டி இடைநீக்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் ஐந்து டிமெரிட் புள்ளிகளை (தகுதியிழப்பு புள்ளிகள்) பெற்றுதால் மே 22ம் தேதி அன்று நடைபெற உள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் போட்டியில் லக்னோ அணிக்காக திக்வேஷ் ரதி விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மேலும் திக்வேஷ் ரதியின் போட்டி சம்பளத்தில் 50% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
55
பட்டும் திருந்தாத திக்வேஷ் சிங் ரதி
அதே வேளையில் அபிஷேக் சர்மா நடப்பு ஐபிஎல் தொடரில் முதன் முறையாக விதிமுறையை மீறியதால் அவருக்குப் போட்டி சம்பளத்தில் 25 சதவீத அபராதம் விதிக்கப்பட்டு, ஒரு டிமெரிட் புள்ளி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் மைதானத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதில் 21 வயதான திக்வேஷ் சிங் ரதி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கெர்சிக் வில்லியம்ஸை பின்பற்றி 'நோட்புக்' கொண்டாட்டங்களை ஐபிஎல் தொடரில் திக்வேஷ் சிங் ரதி பின்பற்றி வருகிறார். அவர் நேராக ஆட்டமிழக்கும் பேட்ஸ்மேன்களின் முன்பு சென்று டைரியில் எழுதுவதுபோல் சைகை காட்டுவதால் அவருக்கும், எதிரணி வீரர்களுக்கும் இடையே பிரச்சனை எழுவது குறிப்பிடத்தக்கது.
பிசிசிஐ இந்த 'நோட்புக்' கொண்டாட்டத்துக்கு அபராதம் விதித்தும் திக்வேஷ் சிங் ரதி திருந்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.