IPL 2023: கடைசில கிடைத்த வாய்ப்பை கூட கோட்டைவிட்ட லிட்டன் தாஸ்; இப்படியெல்லாம் இருந்தா ஜெயிக்க முடியுமா?

First Published | Apr 21, 2023, 2:40 PM IST

டெல்லிக்கு எதிரான போட்டியில் கடைசியில் டெல்லி அணியினர் கொடுத்த எளிதான ஸ்டெம்பிங் வாய்ப்பை கொல்கத்தா விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் கோட்டைவிட்டதைத் தொடர்ந்து ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

டெல்லி கேபிடல்ஸ்

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. எப்படா முதல் வெற்றி என்று போராடிய டெல்லி அணிக்கு நேற்று அதற்கான விடை கிடைத்தது. டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 28ஆவது போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 127 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

டெல்லி கேபிடல்ஸ்

இதில், அதிகபட்சமாக ஜேசன் ராய் 43 ரன்கள் எடுத்தார். இறுதியாக ரஸல் 38 ரன்கள் சேர்த்தார். பந்து வீச்சைப் பொறுத்த வரையில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இஷாந்த் சர்மா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், நோர்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் எளிய இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணியில் வழக்கம் போல் பிருத்வி ஷா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அவர், 13 ரன்களில் வெளியேற, மிட்செல் மார்ஷ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். பில் சால்ட்டும் 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். கடைசி வரை போராடிய டேவிட் வார்னர் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Tap to resize

டெல்லி கேபிடல்ஸ்

கடைசியாக கடைசி 12 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 19ஆவது ஓவரை நிதிஷ் ராணா வீசினார். அதில், 3ஆவது பந்தில் இறங்கி அடிக்க முயற்சித்த அக்‌ஷர் படேல் பந்தை தவற விட்டார். அப்போது அந்த பந்தை பிடித்த் விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் ஸ்டெம்பிங் செய்யும் வாய்ப்பையும் கோட்டைவிட்டார். அதே போன்று அந்த ஓவரில் 5 ஆவது பந்தில் மீண்டும் அதே போன்று இறங்கி அடிக்க அக்‌ஷர் படேல் முயற்சித்தார். ஆனால், அவர் திரும்பவும் எல்லைக் கோட்டை நெருங்கவில்லை. அதிக தூரம் வெளியில் இருந்தார்.

டெல்லி கேபிடல்ஸ்

அப்போது விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் ஸ்டெம்பிங் வாய்ப்பை நழுவ விட்டார். இந்த ஐபிஎல் தொடரில் முதல் முறையாக அறிமுகமான லிட்டன் தாஸ் பேட்டிங்கிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பிங்கிலும் பெரிதும் ஒன்றும் சோபிக்கவில்லை. அதுமட்டுமின்றி அந்த ஸ்டெம்பிங்கை வாய்ப்பை மட்டும் சரியாக பயன்படுத்தியிருந்தால் கொல்கத்தாவின் வெற்றி வாய்ப்பு நிறைவேறியிருக்கும். இப்படி கையில் கிடைத்த வாய்ப்பை கோட்டைவிட்ட லிட்டன் தாஸை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

டெல்லி கேபிடல்ஸ்

சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் வருண் சக்கரவர்த்தி, அனுகுல் ராய், நிதிஷ் ராணா ஆகியோர் சிறப்பாக பந்து வீசி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். டேவிட் வார்னர் மற்றும் பிருத்வி ஷா விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி கைப்பற்றினார். மிட்செல் மார்ஷ் மற்றும் அமான் கான் ஆகியோரது விக்கெட்டை கைப்பற்றினார். பிலிப் சால்ட் மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோரது விக்கெட்டை அனுகுல் ராய் கைப்பற்றினார். ஆனால், வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை.

Latest Videos

click me!