நிதிஷ் ராணா
கொல்கத்தான் ஹோம் மைதானமான ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 19 ஆவது ஐபிஎல் போட்டி நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா பவுலிங் தேர்வு செய்தார்.
நிதிஷ் ராணா
அதன்படி முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மார்க்ரம் அரைசதம் அடிக்க, ஹாரி ப்ரூக் சதம் அடித்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 228 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் இது தான் அதிகபட்ச ஸ்லோராகும்.
நிதிஷ் ராணா
இதையடுத்து கடின இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஜெகதீசன் 36 ரன்கள் அடித்துக் கொடுத்தார். கேப்டன் நிதிஷ் ராணா அதிரடியாக ஆட, ஒரு கட்டத்தில் கொல்கத்தா ஜெயித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 75 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷர்துல் தாக்கூரும் 12 ரன்களில் வெளியேறினார்
நிதிஷ் ராணா
கடைசி வரை போராடிய ரிங்கு சிங் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உடன் 58 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். எனினு, கொல்கத்தா அணி 20 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்களில் தோல்வியை தழுவியது.
நிதிஷ் ராணா
இந்த தோல்விக்குப் பிறகு பேசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா கூறியிருப்பதாவது: பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படவில்லை. ஆடுகளம் எப்படி இருந்தாலும் நாம் திட்டத்தை சரியாக கையாள வேண்டும்.
நிதிஷ் ராணா
இது 200 ரன்களுக்கு மேல் அடிக்கும் மைதானமே கிடையாது. எப்போதும் ரிங்கு சிங் அதிரையாக ஆடி ரன்கள் எடுக்க மாட்டார். இருப்பினும், பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினோம். போட்டி கடைசி வரை போகும் போது முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறும்.
நிதிஷ் ராணா
ஹோம் மைதானத்தில் விளையாடுவது அந்த அணிக்கு தான் சாதகம். ஆனால், எங்களுக்கு அந்தப் போட்டி அப்படி அமையவில்லை. ஏனென்றால், கொல்கத்தால் 200 ரன்கள் அடித்தால் கூட அந்த எளிதில் அடிக்க கூடிய ஸ்கோர்தான். நாங்கள் இனி பவுலிங்கில் கவனம் செலுத்த வேண்டும். பந்து வீச்சாளர்களை நான் குறை சொல்லவில்லை. ஏனென்றால், கடந்த போட்டிகளில் அவர்கள் தான் சிறப்பாக விளையாடினார்கள் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.