#IPL2021Auction இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலயா கேதர் ஜாதவ்..? உங்க கான்ஃபிடன்ஸ் வேற லெவல் ஜாதவ்

Published : Feb 06, 2021, 07:44 PM IST

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்த கேதர் ஜாதவ், அவரது அடிப்படை விலையாக நிர்ணயித்த தொகை பொருத்தமாக இல்லை; அவரது ஓவர் கான்ஃபிடன்ஸை காட்டும் விதமாக உள்ளது.  

PREV
15
#IPL2021Auction இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலயா கேதர் ஜாதவ்..? உங்க கான்ஃபிடன்ஸ் வேற லெவல் ஜாதவ்

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் வரும் 18ம் தேதி நடக்கவுள்ளது. இதையொட்டி, கடந்த ஜனவரி மாதமே அனைத்து அணிகளும் தங்களுக்கு வேண்டாத வீரர்களை ரிலீஸ் செய்தது. அதைத்தொடர்ந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் ஏலத்திற்காக தங்களது பெயர்களை பதிவு செய்தனர்.

25

அந்தவகையில் வெறும் 61 இடங்களுக்கு 1097 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதில், அதிகபட்ச அடிப்படை விலையை தங்களுக்கு நிர்ணயித்துக்கொண்ட 11 வீரர்கள்: க்ளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஷகிப் அல் ஹசன், கேதர் ஜாதவ், ஹர்பஜன் சிங், மொயின் அலி, சாம் பில்லிங்ஸ், லியாம் பிளங்கெட், ஜேசன் ராய், மார்க் உட், காலின் இங்ராம்.

35

இவர்கள் 11 பேரும் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயம் செய்துள்ளனர். இவர்களில் கேதர் ஜாதவ், ஹர்பஜன் சிங் ஆகியோர் தங்களது தரத்தை தாங்களே குறைத்துக்கொண்ட மாதிரி ஆகிவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தான் ரூ.2 கோடியை அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளனர்.

45

சிஎஸ்கே அணியில் கடந்த சீசனில் எந்தவிதமான பங்களிப்பையும் செய்யாமல், விமர்சனத்துக்கு மட்டுமல்லாது, கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார் கேதர் ஜாதவ். அதுமட்டுமல்லாது அவரது ஃபிட்னெஸும் தொடர்ச்சியாக பெரிய பிரச்னையாக இருந்துவந்துள்ளது. அவரால் டெத் ஓவர்களில் பெரிய ஷாட்டுகளை அடித்து ஆட முடிவதில்லை. 
 
55

டி20 கிரிக்கெட்டில் பின்வரிசை பேட்ஸ்மேன்களுக்கு தேவையான தகுதியே, டெத் ஓவர்களில் எப்படியாவது பெரிய ஷாட்டுகளை ஆடும் திறன் இருப்பதுதான். ஆனால் அதிலேயே ஜாதவுக்கு பெரும் பிரச்னை இருக்கிறது. அவரால் பெரிய ஷாட்டுகளை அசாத்தியமாக ஆடமுடியாது. எனவே அவரை இனிமேல் ஒரு அணி ஏலத்தில் எடுப்பதே பெரிய விஷயம். அதில், அவர் ரூ.2 கோடியை அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளார்.

click me!

Recommended Stories