#INDvsENG டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரர்..! வரலாற்று சாதனைகளை வாரிக்குவித்த ஜோ ரூட்

Published : Feb 06, 2021, 02:29 PM IST

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அடித்த சதத்தின் மூலம் ஜோ ரூட் பல சாதனைகளை படைத்துள்ளார்.  

PREV
13
#INDvsENG டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரர்..! வரலாற்று சாதனைகளை வாரிக்குவித்த ஜோ ரூட்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி சிறப்பாக பேட்டிங் ஆடிவருகிறது. 2ம் நாளான இன்றைய ஆட்டத்தின் டீ பிரேக் வரை இங்கிலாந்து அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 454 ரன்களை குவித்துள்ளது. தனது 100வது சர்வதேச போட்டியில் ஆடிவரும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், இந்த போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி இரட்டை சதமடித்து இன்னும் களத்தில் உள்ளார்.

23

இந்த இரட்டை சதத்தின் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார் ஜோ ரூட். தனது 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்துள்ளார் ஜோ ரூட். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த வீரருமே தனது 100வது டெஸ்ட்டில் இரட்டை சதமடித்ததில்லை. இந்த சாதனையை செய்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரூட் படைத்துள்ளார்.
 
33

195 ரன்னிலிருந்து சிக்ஸர் விளாசி இரட்டை சதத்தை எட்டினார் ரூட். இதன்மூலம் சிக்ஸர் அடித்து இரட்டை சதத்தை பூர்த்தி செய்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் ரூட் படைத்துள்ளார். மேலும், இந்தியாவில் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக ரன்களை குவித்த இங்கிலாந்து கேப்டன் என்ற சாதனையையும் ரூட் படைத்துள்ளார். 

click me!

Recommended Stories