எல்லா புகழும் ராகுல் Bhaiக்கே.. ஒரு வாக்கியம்னாலும் திரு வாக்கியம்..! கிரெடிட்டை டிராவிட்டுக்கு கொடுத்த ரஹானே

First Published Feb 2, 2021, 6:03 PM IST

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு முன் ராகுல் டிராவிட் தனக்கு கூறிய அறிவுரையால் தான் தன்னால் சிறப்பாக செயல்பட முடிந்தது என ரஹானே தெரிவித்துள்ளார்.
 

ஆஸி., சுற்றுப்பயணத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடிவிட்டு, தனக்கு குழந்தை பிறக்கவிருந்ததால், நாடு திரும்பிவிட்டார் விராட் கோலி. அதனால் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளிலும் ரஹானே தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தி, அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்து கோப்பையையும் வென்றார்.
undefined
அதுவும், பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி, அஷ்வின், ஜடேஜா, கேஎல் ராகுல் என நட்சத்திர வீரர்கள் ஒவ்வொருவராக காயத்தால் வெளியேறியபோதிலும், இருக்கிற வீரர்களை வைத்துக்கொண்டு, அதிகமான அறிமுக மற்றும் இளம் வீரர்களுடன் டெஸ்ட் தொடரை வென்றார். ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் ஆஸி., சுற்றுப்பயணத்தில் சிறப்பாக செயல்பட்டார் ரஹானே. மெல்போர்ன் டெஸ்ட்டில் சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். பேட்டிங் மற்றும் கேப்டன்சி என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு வரலாற்று வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
undefined
இந்நிலையில், தான் சிறப்பாக செயல்பட முன்னாள் ஜாம்பவானும் லெஜண்ட் கிரிக்கெட்டரும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தற்போதைய தலைவருமான ராகுல் டிராவிட்டின் அறிவுரை தான் காரணம் என ரஹானே தெரிவித்துள்ளார்.
undefined
இதுகுறித்து பேசிய அஜிங்க்யா ரஹானே, ஐபிஎல் முடிந்து துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு கிளம்புவதற்கு முன், ராகுல் டிராவிட் Bhai எனக்கு ஃபோன் செய்து, நீங்கள் தான் கடைசி 3 டெஸ்ட்டில் கேப்டன்சி செய்யப்போகிறீர்கள். எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள்; மனரீதியாக ஸ்ட்ராங்காக இருங்கள். நெட்டில் நிறைய பேட்டிங் ஆடாதீர்கள் என்றார். அது எனக்கு வியப்பாக இருந்தது. அது இயல்பான ராகுல் Bhai இல்லை.
undefined
ராகுல் Bhaiக்கு பேட்டிங் ஆட ரொம்ப பிடிக்கும். ஆனால் நெட்டில் அதிகமாக பேட்டிங் ஆடவேண்டாம்; நீங்கள் நல்ல டச்சில் தான் இருக்கிறீர்கள்; நன்றாக பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கிறீர்கள். எனவே அணியை எப்படி வழிநடத்துவது, வீரர்களுக்கு எப்படி நம்பிக்கையளிப்பது என்பது குறித்து சிந்தியுங்கள். முடிவை பற்றி கவலைப்படாமல் இவற்றையெல்லாம் செய்யுங்கள்; வெற்றி அதுவாகவே வரும் என்று என்னிடம் ராகுல் Bhai சொன்னார். அதுதான் நடந்தது என்று ரஹானே தெரிவித்தார்.
undefined
click me!