ஜியோ ஹாட்ஸ்டாரில் 66.9 கோடி பேரைக் கவர்ந்த இந்தியாவின் ரிவெஞ்ச் வெற்றி!

Published : Mar 05, 2025, 10:04 AM ISTUpdated : Mar 05, 2025, 10:05 AM IST

IND vs AUS Jio Hotstar Live Streaming Viewership: ஜியோ ஹாட்ஸ்டார் லைவ் ஸ்டிரீமிங்கில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டி புதிய சாதனை படைத்துள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் மூலம் 66.9 கோடி பேர் இந்தப் போட்டியைப் பார்த்து ரசித்துள்ளனர்.

PREV
14
ஜியோ ஹாட்ஸ்டாரில் 66.9 கோடி பேரைக் கவர்ந்த இந்தியாவின் ரிவெஞ்ச் வெற்றி!
India vs Australia Viewership

செவ்வாய்க்கிழமை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாயை வீழ்த்தியது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதனை சேஸ் செய்த இந்திய அணி 48.1 ஓவர்களிலேயே 267 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

24
Jio Hotstar Live Streaming

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான அரையிறுதிப் போட்டி ஜியோ ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது. முதல் இன்னிங்ஸ் நிலவரப்படி, 66.9 கோடிக்கும் அதிகமான (669 மில்லியன்) மக்கள் ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்தக் கிரிக்கெட் போட்டியை பார்த்துள்ளனர்.

கடைசியாக இந்தியா - ஆஸ்திரேலியா விளையாடிய பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் ஒரு போட்டி 19.25 கோடி (192.5 மில்லியன்) பார்வையாளர்களைப் பெற்றிருந்தது. இப்போது சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டி முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது. முந்தைய எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இப்போட்டியின் பார்வையாளர் எண்ணிக்கை 76 சதவீதம் அதிகம் என பிசினஸ் ஸ்டாண்டர்ட் அறிக்கை கூறுகிறது. ஒட்டுமொத்த வளர்ச்சியில் இது 160 சதவீதம் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

34
IND vs AUS semi-finals

மார்ச் 2, 2025 அன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியா vs நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், பார்வையாளர்களின் எண்ணிக்கை 40 கோடியை (400 மில்லியன்) தாண்டியது. அப்போது இந்தியா நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில்தோற்கடித்தது.

நியூசிலாந்து போட்டிக்கு முன்பு, இந்தியா vs பாகிஸ்தான் போட்டியும் சாதனைகளை முறியடித்தது. துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்த்து. அந்தப் போட்டியின்போது 60.2 கோடிக்கும் அதிகமான (602 மில்லியன்) பார்வையாளர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் மூலம் லைவ் ஸ்டிரீமிங் செய்து பார்த்தனர்.

44
ICC Champions Trophy 2025

விளம்பரத்துடன் கூடிய ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா இரண்டு பிரிவுகளில் வருகிறது. விளம்பரம் இல்லாத பிரீமியம் திட்டங்களுக்கு மாதாந்திர, காலாண்டு அல்லது வருடாந்திர அடிப்படையில் சந்தா செலுத்தலாம்.

விளம்பரங்களுடன் கூடிய ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா மூன்று மாதங்களுக்கு ரூ.149. ஒரு வருடத்திற்கு ரூ.499. பிரீமியம் திட்டங்கள் ஒரு மாதத்திற்கு ரூ.299 இல் தொடங்குகின்றன. மூன்று மாத பிரீமியம் திட்டத்திற்கு ரூ.499, வருடாந்திர பிரீமியம் திட்டத்திற்கு ரூ.1,499 செலுத்த வேண்டும். இந்த பிரீமியம் திட்டங்களை விளம்பரங்கள் இல்லாமல் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories