சச்சின் மகனை சத்தியமா திறமையின் அடிப்படையில் தான் எடுத்தோம்..! ரசிகர்களை நம்பவைக்க படாதபாடு படும் ஜெயவர்தனே

First Published Feb 19, 2021, 3:40 PM IST

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்தில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை முழுக்க முழுக்க திறமையின் அடிப்படையிலேயே எடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் நேற்று சென்னையில் நடந்தது. முழுக்க முழுக்க ஃபாஸ்ட் பவுலர்களுக்கான ஏலமாக இது இருந்தது. ஃபாஸ்ட் பவுலர்களுக்கு கிராக்கி அதிகமாக இருந்ததால், கிறிஸ் மோரிஸ்(ரூ.16.25 கோடி), கைல் ஜாமிசன்(ரூ.15 கோடி), ஜெய் ரிச்சர்ட்ஸன்(ரூ.14 கோடி), மெரிடித்(ரூ.8 கோடி) ஆகியோர் அதிக விலைக்கு ஏலம்போனார்கள்.
undefined
மும்பை இந்தியன்ஸ் அணி, ஆஸி., ஃபாஸ்ட் பவுலர் நேதன் குல்ட்டர்நைலை ரூ.5 கோடிக்கும், நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஆடம் மில்னேவை ரூ.3.20 கோடிக்கும் ஏலத்தில் எடுத்தது.
undefined
ஃபாஸ்ட் பவுலர்கள் மற்றும் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர்கள் மீதே அனைத்து அணிகளும் கவனம் செலுத்தி ஏலத்தில் எடுத்தன. அந்தவகையில், வலுவான கோர் டீமை கொண்ட சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸும் ஃபாஸ்ட் பவுலர்கள் மற்றும் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர்களையே எடுத்தது.
undefined
அனைவரும் எதிர்பார்த்ததை போலவே சச்சின் டெண்டுல்கர் மகனும் இடது கை ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டருமான அர்ஜுன் டெண்டுல்கரை ரூ.20 லட்சம் என்ற அவரது அடிப்படை விலைக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அர்ஜுன் டெண்டுல்கர் தான் ஏலத்தின் கடைசி வீரர். அவரை அடிப்படை விலைக்கு மும்பை இந்தியன்ஸ் எடுத்தது. அர்ஜுன் டெண்டுல்கர் திறமையானவர் என்றாலும், சச்சின் டெண்டுல்கருக்காக அவரை கண்டிப்பாக மும்பை அணி எடுக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்தவகையில் அந்த அணி தான் எடுத்தது.
undefined
இதையடுத்து, திறமை என்பதைவிட, சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதற்காகவே அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்ததாகவும், வாரிசு அடிப்படையிலான தேர்வு தான் இது என்றும் டுவிட்டரில் ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கினர்.
undefined
இந்நிலையில், திறமையின் அடிப்படையில் தான் அர்ஜுனை எடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே கூறியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜெயவர்தனே, முழுக்க முழுக்க திறமையின் அடிப்படையில் தான் அர்ஜுன் டெண்டுல்கரை எடுத்தோம். சச்சின் மகன் என்ற பெரிய டேக் அர்ஜுன் தலையில் தொங்குகிறது. ஆனால் நல்லவேளையாக அர்ஜுன் பேட்ஸ்மேன் கிடையாது; இவர் ஒரு ஃபாஸ்ட் பவுலர். எனவே அர்ஜுன் அர்ஜுனாக பந்துவீசினால் அதைக்கண்டு சச்சின் பெருமைப்படுவார் என நினைக்கிறேன் என ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.
undefined
click me!