#IPL2021Auction விலைபோகாத வீரர்கள் பட்டியலில் ஏகப்பட்ட அதிரடி மன்னர்கள் இடம்பெற்ற அதிர்ச்சி

First Published | Feb 19, 2021, 2:12 PM IST

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
 

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் நேற்று சென்னையில் நடந்தது. இந்த ஏலத்தில் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அதிகபட்சமாக ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். ஏலத்தில் அதிக விலைக்கு விலைபோன வீரர் என்ற சாதனையை படைத்தார் கிறிஸ் மோரிஸ். ஜெய் ரிச்சர்ட்ஸன், க்ளென் மேக்ஸ்வெல் ஆகிய வீரர்களும் அதிக விலைக்கு ஏலம்போனார்கள்.
மோரிஸ், மேக்ஸ்வெல் எல்லாம் அதிகமான தொகைக்கு ஏலம்போன அதேவேளையில், ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஆரோன் ஃபின்ச் ஆகிய அதிரடி வீரர்களை எந்த அணியும் எடுக்க முன்வராததால், அவர்களெல்லாம் விலைபோகவில்லை. ஐபிஎல்லில் கிட்டத்தட்ட அனைத்து அணிகளிலும் ஆடிவிட்ட ஆரோன் ஃபின்ச், கடந்த சீசனில் ஆர்சிபி அணியில் ஆடினார். அவர் எதிர்பார்த்த அளவிற்கு ஆடாததால் அவரை ஆர்சிபி அணி கழட்டிவிட்டது. இந்நிலையில், 14வது சீசனுக்கான ஏலத்தில் அவரை எந்த அணியும் எடுக்கவில்லை.
Tap to resize

இங்கிலாந்து அதிரடி வீரர்களான ராய் மற்றும் ஹேல்ஸையும் எந்த அணியும் சீண்டவில்லை. ஆனால் அலெக்ஸ் ஹேல்ஸ் நடந்து முடிந்த பிக்பேஷ் லீக் தொடரில் மிக அபாரமாக ஆடியிருந்தார்.
ஏலத்தில் விலைபோகாத மேலும் சில முக்கியமான வீரர்கள்:ஷான் மார்ஷ், லியாம் பிளங்கெட், அலெக்ஸ் கேரி, மோர்னே மோர்கல், டேவிட் வில்லி, எவின் லூயிஸ், ஹனுமா விஹாரி, ஷெல்டான் கோட்ரெல், மார்னஸ் லபுஷேன், ஜேசன் பெஹ்ரண்டார்ஃப், பில்லி ஸ்டேன்லேக், மேத்யூ வேட், டிம் சௌதி, கர்லோஸ் பிராத்வெயிட், இசுரு உடானா, காலின் முன்ரோ, மார்டின் கப்டில், காலின் டி கிராண்ட் ஹோம், கிறிஸ் க்ரீன் ஆகிய முக்கியமான வீரர்களும் ஐபிஎல் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

Latest Videos

click me!