ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் நேற்று சென்னையில் நடந்தது. இந்த ஏலம் முழுக்க முழுக்க ஃபாஸ்ட் பவுலர்களுக்கான ஏலமாக அமைந்தது. பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் ஃபாஸ்ட் பவுலர்களை குறிவைத்து அதிக தொகைக்கு எடுத்தனர்.
அந்தவகையில், ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான கிறிஸ் மோரிஸை அதிகபட்சமாக ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்தது. அதேபோல நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் கைல் ஜாமிசனை ரூ.15 கோடிக்கு ஆர்சிபி அணியும், ஆஸி., ஃபாஸ்ட் பவுலர்களான ஜெய் ரிச்சர்ட்ஸன் மற்றும் மெரிடித்தை முறையே ரூ.14 கோடி மற்றும் ரூ.8 கோடிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. ஆஸி., ஃபாஸ்ட் பவுலர் நேதன் குல்ட்டர்நைலை ரூ.5 கோடிக்கு எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி, நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஆடம் மில்னேவை ரூ.3.20 கோடிக்கு எடுத்தது.