ஐபிஎல்லால் வந்த ஆப்பு.. இந்திய அணிக்கு கடும் பின்னடைவு

First Published | Oct 23, 2020, 2:19 PM IST

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் 2 நட்சத்திர வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. நவம்பர் 10ம் தேதியுடன் ஐபிஎல் முடிவடையும் நிலையில், அதன்பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய அணி, 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது.
Tap to resize

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவிற்கு செல்லவுள்ளனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் சீனியர் ஃபாஸ்ட் பவுலர்களான இஷாந்த் சர்மா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரும் இடம்பெறமாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல்லின் போது இருவருமே காயமடைந்தனர். இஷாந்த் சர்மா டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆடினார். காயம் காரணமாக சீசனிலிருந்து விலகி இந்தியா திரும்பிய இஷாந்த் சர்மா, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தயாராகிவருகிறார்.
அதேபோல சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிய புவனேஷ்வர் குமாரும் காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து விலகினார். அவரும் காயத்திலிருந்து மீள சில காலம் எடுக்கும் என்பதால், இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இடம்பெறமாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இஷாந்த் சர்மா இந்திய அணியின் சீனியர் பவுலர். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னணி பவுலராக இருப்பவர். புவனேஷ்வர் குமார் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் முன்னணி பவுலராக திகழ்பவர். இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் ஆடவில்லை என்றால் அது சற்று பாதிப்பாகவே அமையும்.
பும்ரா, ஷமி ஆகிய சீனியர் பவுலர்களுடன், நவ்தீப் சைனி உள்ளிட்ட இளம் பவுலர்கள் பலர் இருந்தாலும், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமாரின் அனுபவம் கண்டிப்பாக ஆஸ்திரேலியாவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அந்தவகையில், அவர்கள் இல்லாதது பாதிப்பாக அமையும்.

Latest Videos

click me!