முடிவுக்கு வரும் சீனியர் வீரர்களின் ஐபிஎல் வாழ்க்கை – கேள்விக்குறியாகும் இந்திய வீரர்களின் எதிர்காலம்!

First Published | Oct 20, 2024, 4:37 PM IST

Indian Players Who Dropped Before IPL 2025 Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, அணிகளில் யார் நீடிப்பார்கள், யார் விலகுவார்கள் என்பது பற்றிய ஊகங்கள் எழுந்துள்ளன. கடந்த சீசன்களில் சொதப்பிய வீரர்கள் இந்த சீசனில் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2025 Mega Auction, Indian Players Who Dropped Before IPL 2025 Auction

Indian Players Who Dropped Before IPL 2025 Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாகவே ஒவ்வொரு அணியிலும் யார் இருப்பார்கள், யார் விலகுவார்கள் என்ற ஊகங்கள் உள்ளன. ஏற்கனவே ஐபிஎல் தொடருக்கான தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலில் இவர் இருப்பாரோ அவர் இருப்பாரோ என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. கடந்த சீசன்களில் சொதப்பிய வீரர்கள் இந்த சீசனில் வெளியேற்றப்படுவார்கள்.

IPL 2025, IPL 2025 Mega Auction

அதோடு, அவர்கள் ஏலம் எடுக்கப்பட வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட இந்திய வீரர்களைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.

Tap to resize

Ishant Sharma, Delhi Capitals Released Players, IPL 2025

இஷாந்த் சர்மா:

டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருக்கும் சீனியர் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா. ஐபிஎல் கிரிக்கெட்டின் அறிமுக சீசனிலிருந்து விளையாடி வருகிறார். இதுவரையில் 110 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 93 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். ஒரு முறை 5 விக்கெட்டும் எடுத்துள்ளார். தற்போது 36 வயதாகும் இஷாந்த் சர்மாவை டெல்லி கேபிடல்ஸ் தக்க வைத்துக் கொள்ளுமா என்பது தான் கேள்வி.

Ishant Sharma, Delhi Capitals Released Players, IPL 2025

ஒரு முறை டிராபி கைப்பற்றாத அணிகளின் பட்டியலில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் இடம் பெற்றிருக்கிறது. அப்படியிருக்கும் போது 36 வயதான இஷாந்த் சர்மாவை விடுவித்து அவருக்குப் பதிலாக இளம் வீரரை டெல்லி எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதிக வயதின் காரணமாக பந்துவீசுவதற்கு ஓடும் போதெல்லாம் அவரது உடல் பலமடைகிறது. ஆதலால், இந்த சீசனில் அவர் விடுவிக்கப்படலாம். வேறு எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டாது.

Amit Mishra, IPL 2025, LSG Released Players

அமித் மிஸ்ரா:

ஐபிஎல் தொடரில் அதிக வயதில் இடம் பெற்று விளையாடி வரும் மற்றொரு இந்திய வீரர் அமித் மிஸ்ரா. இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத போதிலும் லக்னோ அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். கடந்த சீசனில் ஒரு போட்டியில் விளையாடி ஒரு விக்கெட் எடுத்தார். அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் இவரும் ஒருவர்.

Amit Mishra, IPL 2025, Lucknow Super Giants

தற்போது 41 வயதாகும் அமித் மிஸ்ரா இந்த சீசனில் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடல் தகுதி காரணமாக இனி வரும் சீசன்களில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்காது என்று தெரிகிறது. மேலும், ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி மிஸ்ரா கிரிக்கெட் வர்ணனையாக பணியாற்றலாம்.

Karn Sharma, IPL 2025, Royal Challengers Bengaluru

கர்ண் சர்மா:

ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்னதாக ஆர்சிபியிலிருந்து வெளியேற்றப்படும் மற்றொரு இந்திய வீரர் கர்ண் சர்மா. ஐபிஎல் தொடரில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத வீரர். கடந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

தற்போது 36 வயதாகும் அவரை ஆர்சிபி வெளியிட்டு அவருக்குப் பதிலாக இளம் வீரரை ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு முறை கூட டிராபி ஜெயிக்காத அணிகளின் பட்டியலில் ஆர்சிபி இடம் பெற்றிருக்கிற்து. இந்த முறை எப்படியும் டிராபி கைப்பற்ற சிறந்த வீரர்களை ஆர்சிபி ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!