ஐபிஎல் 2025 ஏலத்துக்கு முன்னாடியே இந்த வீரர்களை தூக்கி எறியும் மும்பை இந்தியன்ஸ்; யார் யார் தெரியுமா?

First Published | Oct 20, 2024, 12:00 PM IST

Mumbai Indians Released Players: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி பல வீரர்களை விடுவிக்கலாம். குவேனா மஃபாகா, முகமது நபி, டெவால்ட் பிரேவிஸ் போன்ற வீரர்கள் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது.

IPL 2025 Mega Auction, Mumbai Indians Released Players

Mumbai Indians Released Players: 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் நவம்பர் 30ஆம் தேதி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஐபிஎல் 2025 தொடருக்கான தக்க வைப்பு விதிகள் அறிவிக்கப்பட்டது தெரிந்த ஒன்று. இந்த முறை ஒரு ஆர்டிஎம் உள்பட மொத்தமாக 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Mumbai Indians, IPL 2025, Hardik Pandya

இதில் ஒவ்வொரு அணியிலும் எந்தெந்த வீரர்கள் தக்க வைக்கப்படுவார்கள், யார் விடுவிக்கப்படுவார்கள் என்பதுதான் இப்போது அனைவரின் பார்வையும். 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக பல வீரர்களை விடுவிக்கலாம்.

Tap to resize

Mumbai Indians Released Players, IPL 2025, Rohit Sharma

அப்படி விடுவிக்கப்படும் வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணியே ஏலத்தில் எடுக்கப்படலாம். ஆனால் சில வீரர்களை ஏலத்தில் எடுப்பது ரொம்பவே கடினம். இந்த மாத இறுதிக்குள்ளாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

IPL 2025 Mega Auction, Mumbai Indians Released Players, Rohit Sharma, Hardik Pandya

அதற்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே ஒவ்வொரு அணியிலும் தலைமை பயிற்சியாளர் முதல் ஆலோசகர் வரையில் மாற்றப்பட்டு வருகிறது.

IPL 2025, Mumbai Indians Released Players, MI Retained Players

மும்பை இந்தியன்ஸ் அணியில் தலைமை பயிற்சியாளராக இருந்த தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மஹேலா ஜெயவர்தனே மீண்டும் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்திய ஹர்திக் பாண்டியா விளையாடிய 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்றுக் கொடுத்தார். இப்போது மெகா ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் எந்த வீரரை தூக்கி எறியும் என்று பார்க்கலாம்.

Kwena Maphaka, Mumbai Indians Released Players, IPL 2025

குவேனா மஃபாகா:

தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான குவேனா மஃபாகா 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றார்.

Mumbai Indians Retained Players, IPL 2025

ஆனால், இந்த சீசனில் அவருக்கு 2 போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதில், 89 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். இதன் காரணமாக 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக அவர் விடுவிக்கப்படலாம். மேலும், அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வராது.

Mohammad Nabi, MI Released Players, IPL 2025

முகமது நபி:

ஆப்கானிஸ்தானின் ஆல்ரவுண்டர் முகமது நபி தக்க வைக்கப்பட வாய்ப்பில்லை. ரூ.1.50 கோடிக்கு கடந்த சீசனில் இடம் பெற்று விளையாடிய நபி 7 போட்டிகளில் 35 ரன்களை மட்டுமே எடுத்தார். மேலும், பவுலிங்கில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் காரணமாக 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக அவர் தக்க வைக்கப்பட வாய்ப்பில்லை. 39 வயதான அவரை எந்த அணியும் வாங்க வாய்ப்பில்லை. இளம் வீரர்களை தேர்வு செய்ய ஒவ்வொரு அணியும் விரும்பும் என்பதால், முகமது நபி ஏலத்தில் எடுக்கப்பட வாய்ப்பில்லை.

Dewald Brevis, Mumbai Indians Released Players, IPL 2025

டெவால்ட் பிரேவிஸ்:

ஏபி டிவிலியர்ஸ் போன்று விளையாடுவதால் டெவால்ட் பிரேவிஸ் பேபி ஏபி என்று அழைக்கப்படுகிறார். கடந்த சீசனில் விளையாடிய 3 போட்டிகளில் 69 ரன்கள் மட்டுமே எடுத்தார். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சீசனில் 7 போட்டிகளில் 161 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக பிரேவிஸ் விடுவிக்கப்படுவார் என்று தெரிகிறது. மேலும் வரும் ஏலத்தில் அவர் எடுக்கப்படவும் வாய்ப்பில்லை.

Latest Videos

click me!