ஒரு ரன்னில் சதத்தை இழந்து, ஒட்டு மொத்த ரசிகர்களின் இதயங்களை ஜெயிச்ச ரிஷப் பண்ட்!

Published : Oct 19, 2024, 10:56 PM ISTUpdated : Oct 20, 2024, 07:17 AM IST

Rishabh Pant Missed Century: பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 90+ ரன்களில் அதிக முறை ஆட்டமிழந்த வீரர்களின் பட்டியலில் இணைந்தார்.

PREV
17
ஒரு ரன்னில் சதத்தை இழந்து, ஒட்டு மொத்த ரசிகர்களின் இதயங்களை ஜெயிச்ச ரிஷப் பண்ட்!
Rishabh Pant, India vs New Zealand

Rishabh Pant Misses Century by One Run: பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் தோனியின் சாதனையை முறியடித்தார். இருப்பினும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்டை ஒரே ஒரு ரன் பல முறை சதம் அடி விடாமல் தடுத்துள்ளது.

27
Rishabh Pant 99 Runs, India vs New Zealand

பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் வெறும் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்க்ஸில் 402 ரன்கள் எடுத்தது. இதனால் அந்த அணிக்கு முதல் இன்னிங்க்ஸில் 356 ரன்கள் முன்னிலை கிடைத்தது.

37
Most nineties in Test Cricket

இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சிறப்பாக விளையாடியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 35 ரன்கள், ரோகித் சர்மா 52 ரன்கள் எடுத்தனர். விராட் கோலி 70 ரன்கள் எடுத்தார். சர்ஃபராஸ் கான் 150 ரன்கள் எடுத்தார். ரிஷப் பண்ட் சதம் அடிக்காமல் 99 ரன்களில் ஆட்டமிழந்தார்.

47
Rishabh Pant 99 Runs Out

ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏழு முறை 90+ ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். இந்த ஏழு சந்தர்ப்பங்களில் பண்ட் சதம் அடித்திருந்தால், அவரது சதங்களின் எண்ணிக்கை 13 ஆக இருந்திருக்கும். தற்போது பண்ட், தோனியுடன் சமமாக 6 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார்.

57
Rishabh Pant Missed his Century

டெஸ்ட் கிரிக்கெட்டில் 99 ரன்களில் ஆட்டமிழந்த ரிஷப் பண்ட் 2ஆவது விக்கெட் கீப்பரானார். இதற்கு முன்னதாக கடந்த 2012ல் இங்கிலாந்துக்கு எதிரான நாக்பூர் டெஸ்டில் தோனி 99 ரன்களில் ஆட்டமிழந்தார்.

67
India vs New Zealand, Rishabh Pant

பெங்களூரு டெஸ்டில் ரிஷப் பண்ட் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 90+ ரன்களில் அதிக முறை ஆட்டமிழந்த இந்திய வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் 10 முறை ஆட்டமிழந்து ஒரே இடத்தில் இருக்கின்றனர்.

77
Rishabh Pant 99 Runs Out

இந்தப் பட்டியலில் தற்போது ரிஷப் பண்ட் இணைந்துள்ளார். இன்றைய போட்டியில் 99 ரன்களில் ஆட்டமிழந்து 7ஆவது முறையாக ஆட்டமிழந்த வீரரானார். தோனி 5 முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் 90+ ரன்களில் அவுட்டாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories