Virat Kohli: கிரிக்கெட் கிங் விராட் கோலி ஐபிஎல் 2026 பைனலில் RCB vs GT மோதும் போட்டியிடன் ஓய்வு பெற போவதாக தகவல் பரவி வருகிறது. உண்மை என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் கிளைமேக்ஸை நெருங்கி விட்டது. மே 31ஆம் தேதியான நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லுமா? இல்லை குஜராத் அணி ஆர்சிபியை சாய்த்து இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாளையுடன் விராட் கோலி ஓய்வா?
இதனால் ஐபிஎல் பைனலை உலகமே ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள நிலையில், கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி நாளையுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது. அதாவது ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் இன்ஸ்டாகிராமில் போட்ட இரு போஸ்ட் தான் இந்த பரபரப்புக்கு காரணமாகி விட்டது. அதாவது ரஜத் படிதார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலியுடன் இருக்கும் ஒரு நெகிழ்ச்சியான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்திற்கு கீழே அவர் "The Final" என்று மட்டும் போட்டு இருந்தார்.
23
ரஜத் படிதார் போட்ட போஸ்ட்
இதைப்பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் ."தி ஃபைனல்" என்றால் நாளை தான் விராட் கோலியின் வாழ்நாளின் இறுதிப் போட்டியா? நாளைக்கு அப்புறம் கோலியை ஆர்சிபி ஜெர்சியில் பார்க்க முடியாதா? என்று சமூகவலைத்தளங்களில் டிரெண்ட் செய்தனர். விராட் கோலி நாளையுடன் ஓய்வு பெற போவதை தான் 'தி பைனல்' என ரஜத் படிதார் குறிப்பிட்டுள்ளதாக இணையங்களில் வேகமாக பரவியது.
உண்மை என்ன?
ஆனால் ரஜத் படிதாரின் இன்ஸ்டாகிராம் போஸ்டை உன்னிப்பாக கவனித்தால் அவர் குறிப்பிட்டது நடப்பு 2026 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியைத்தானே தவிர, கோலியின் ஓய்வை அல்ல. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நாளை நடக்கவிருக்கும் பெரி யுத்தத்தை குறிக்கவே அவர் "The Final" என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். கோலி கிரிகெட்டின் ஜாம்பவான் என்பதால் அவரது படத்தை பகிர்ந்து இந்த போஸ்ட் போட்டதால் ரசிகர்கள் இதை தவறாக நினைத்துக் கொண்டனர்.
33
உச்சக்கட்ட பார்மில் இருக்கும் விராட் கோலி
விராட் கோலி சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து மட்டும் தான் ஓய்வு பெற்றுள்ளார். ஓடிஐ தொடரில் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுகிறார். இந்த இரண்டிலும் குறிப்பாக ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற போவதாக விராட் கோலி மறைமுகமாக கூட எங்கும் இதுவரை சொல்லவில்லை.
இது மட்டுமின்றி இந்த 2026 சீசனில் விராட் கோலி ரன் மெஷினாக வலம் வருகிறார். 15 போட்டிகளில் 600-க்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக 105 ரன்கள் விளாசினார். இப்படி உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் கோலி இப்போது ஓய்வு பெற வாய்ப்பே இல்லை என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். ஆகவே ஆர்சிபி ரசிகர்கள் மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.