MS Dhoni: எல்லோரையும் விட எம்.எஸ்.தோனி தான் சிறந்தவர்!

First Published | Sep 19, 2024, 3:28 PM IST

MS Dhoni and Mushfiqur Rahim: வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிதாக எந்த சாதனையும் படைக்கவில்லை. ஆனால், தோனியோ ஒரு கேப்டனாக 3 ஐசிசி டிராபிகளை வென்று கொடுத்துள்ளார். ஆதலால், முஷ்பிகுர் ரஹீமை விட எம்.எஸ்.தோனி சிறந்தவர்.

MS Dhoni and Mushfigur Rahim

இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்று கொடுத்த எம்.எஸ்.தோனியை விட வங்கதேச கிரிக்கெட் வீரரும், விக்கெட் கீப்பருமான முஷ்பிகுர் ரஹீம் சிறந்தவரா? என்று கேட்டால், ஆம் அவர் தோனியை விட 1000 மடங்கு சிறந்தவர் என்று இந்த விஷயங்களில் குறிப்பிட்டு சொல்லலாம். அது எந்தவிஷயங்கள் என்று நீங்களே இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள்…

MS Dhoni and Mushfigur Rahim

நாகினி டான்ஸ்:

வங்கதேச அணியில் சிறந்த விக்கெட் கீப்பராக முஷ்பிகுர் ரஹீம் அறியப்பட்டாலும் அவர் கிரிக்கெட்டை விட நடனத்தில் பெயர் பெற்றுள்ளார். பிறவிலேயே டான்ஸ் குடும்பத்தை சேர்ந்தவர். சர்வதேச நடன கலைஞருக்கு கூட சவால் விடும் அளவிற்கு டான்ஸில் வித்தகர். டான்ஸின் டான் பிராட்மேன் என்று அழைப்பதில் தவறில்லை.

ஆனால், முஷ்பிகுர் ரஹீமுடன் ஒப்பிடுகையில் தோனி டான்ஸில் பின் தங்கியிருக்கிறார். எந்த கிரிக்கெட் வீரரும் முஷ்பிகுர் ரஹீமுக்கு டான்ஸில் சவால் விட முடியாது.

Tap to resize

Mushfiqur Rahim

சக வீரர்களை துன்புறுத்துவது:

சக வீரர்களை துன்புறுத்தும் தைரியம் கொண்டவர். எப்படியென்றால், முஷ்பிகுர் ரஹீம் 5 அடி 3 அங்குல வீரர். தன்னை விட அதிக உயரம் கொண்ட வீரர்களை கேலி, கிண்டல் செய்யக் கூடிய திறமை கொண்டவர்.

ஆனால், தோனி கூல் பிளேயர். களத்திலேயும் சரி, களத்திற்கு வெளியேயும் சரி, நல்ல மனிதர். எப்போதும் மற்றவர்களை துன்புறுத்தாமல் விளையாட்டை விளையாடக் கூடியவர். தனது திறமையை பேட்டின் மூலமாகவே காட்டக் கூடியவர்.

IND vs BAN 2016 T20 World Cup

போட்டியில் வெற்றி பெறுவதற்கு முன்பே வெற்றியை கொண்டாடுவது:

2016 டி20 உலகக் கோப்பை தொடரை அவ்வளவு சீக்கிரம் யாராலயும் மறந்திருக்க முடியாது. அதுவும் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலாக நடைபெற்ற 25ஆவது போட்டி தான். இந்தப் போட்டியில் இந்திய அணி கடைசியாக தோனி செய்த ரன் அவுட் மூலமாக ஒரு ரன்னில் வெற்றி பெற்றது. கடைசி 6 பந்தில் வங்கதேசத்தின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது.

முஷ்பிகுர் ரஹீம் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் விளாசினார். கடைசியாக 3 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், வங்கதேச வீரர்கள் இப்போதே கொண்டாட தொடங்கிவிட்டனர். கடைசி பந்தில் வங்கதேச வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த பந்தில் தோனியின் மின்னல் வேக ரன் அவுட் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது.

MS Dhoni

மறக்க முடியாத நிகழ்வு:

தோனி செய்த ரன் அவுட் தான் இன்றும் ரசிகர்களால் வியந்து பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் மின்னல் வேகத்தில் ஓடி வந்த தோனி செய்த ரன் அவுட் தான் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது.

MS Dhoni Cricket Records

அந்தந்த அணியைப் பொறுத்த வரையில் இருவரும் அற்புதமான வீரர்கள். ஆனால், இருவரில் யார் சிறந்த வீரர்கள் என்ற கேள்வி சற்று வேடிக்கையானது. இவர்களுக்கு இடையில் எந்த ஒப்பீடும் தேவையில்லை. அதாவது, வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிதாக எந்த சாதனையும் படைக்கவில்லை. ஆனால், தோனியோ ஒரு கேப்டனாக 3 ஐசிசி டிராபிகளை வென்று கொடுத்துள்ளார். ஆதலால், முஷ்பிகுர் ரஹீமை விட எம்.எஸ்.தோனி சிறந்தவர்.

Latest Videos

click me!