India vs Bangladesh 2024
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானை 2-0 என்று வீழ்த்தி வரலாற்று சாதனையோடு இந்தியாவில் கால் பதித்த வங்கதேச வீரர்கள், இந்தியாவையும் 2-0 என்று வீழ்த்தும் முனைப்போடு தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர்.
IND vs BAN 1st Test
இதுவரையில் இந்தியாவிற்கு எதிராக ஒரு போட்டியில் கூட ஜெயிக்காத வங்கதேசம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்று வெற்றி பெற்று இந்தியாவை ஒயிட்வாஷ் செய்யவே சென்னையில் கால் பதித்திருக்கிறது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் போட்டியே வங்கதேச அணிக்கு சாதகமாக மாறியிருக்கிறது. எப்படி என்றால், டாஸ் வங்கதேசத்திற்கு சாதமாகவே விழுந்துள்ளது.
India vs Bangladesh 2024
எனினும், வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ பவுலிங் தேர்வு செய்தார். எனினும், வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியைப் பொறுத்த வரையில் அக்ஷர் படேல் மற்றும் குல்தீப் யாதவ்விற்கும், யாஷ் தயாள் மற்றும் சர்ஃபராஸ் கானுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்திய அணியில் வழக்கம் போல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். எனினும், இந்திய அணிக்கு ரன் கணக்கை தொடங்கி வைத்த யஷஸ்வி நிதானமாக விளையாடி வருகிறார். ஆனால், முதல் பவுண்டரி அடித்து பவுண்டரி கணக்கை தொடங்கி வைத்த கேப்டன் ரோகித் சர்மா 6 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
Shubman Gill, IND vs BAN
இந்திய அணியின் 580ஆவது டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தோல்வியை விட அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா படைக்கும். ஆனால், வங்கதேசத்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இப்படி அடுத்தடுத்து இந்திய வீரர்கள் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர்.
ரோகித் சர்மாவைத் தொடர்ந்து சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த விராட் கோலி அதிரடி ஷாட்டுகளை ஆடிய போதிலும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் கூட இல்லாமல் 6 ரன்னுக்கு ஆட்டமிழந்து வேதனை அளித்தார். கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பிய போதிலும் நிதானமாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடி ஷாட்டுக்கு ஆசைப்பட்டு கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.
Virat Kohli, IND vs BAN Test
பாகிஸ்தானைப் போன்று இந்தியாவும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஹசன் மஹ்மூத் தற்போது போட்டி தொடங்கி ஒரு மணி நேரத்திற்குள்ளாக இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் சேப்பாக்கத்தில் விளையாடி வரும் விராட் கோலி மொத்தமாக 422 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். வரிசையாக ரோகித் சர்மா, சுப்மன் கில் மற்றும் விராட் கோலியை சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். 5 ஓவர்கள் வீசிய ஹசன் மஹ்மூத் 2 மெய்டன் உள்பட 6 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
Rohit Sharma, IND vs BAN Test
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.
வங்கதேசம்:
ஷத்மன் இஸ்லாம், ஜாகீர் ஹசன், நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ (கேப்டன்), மோமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகீப் அல் ஹசன், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), தஸ்கின் அகமது, மெஹிடி ஹசன் மிராஸ், ஹசன் மஹ்மூத், நஹீத் ராணா.