டி20யோ, டெஸ்டோ எல்லா பார்மேட்லயும் எங்க ஆள் தான் கில்லி; இந்திய பவுலர் குறித்து கம்பீர் பெருமிதம்

First Published Sep 18, 2024, 11:33 PM IST

டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்து வகையான போட்டியிலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சிறப்பாக செயல்படுவதாக அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணில் வொயிட் வாஷ் செய்த உற்சாகத்தோடு வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா, வங்கதேசம் இடையே 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இரு அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேபாக்கம் மைதானத்தில் வியாழன் கிழமை நடைபெறுகிறது.

Gautam Gambhir Press Meet

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அண்மையில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய வீரர் பும்ரா 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். தற்போது வங்கதேசம் இடையேயான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதன் மூலம் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பி உள்ளார்.

Latest Videos


3 விதமான போட்டிகளிலும் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக பும்ரா உள்ளார். இந்தியாவில் பந்து வீச்சாளர்கள் குறித்து அதிகம் பேசுவது கிடையாது. எப்போதும் இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் குறித்தே பேசுவார்கள். ஆனால் தற்போது பந்து வீச்சாளர்களை பற்றியும் பேச முக்கயமான காரணமாக பும்ரா, ஷமி, சிராஜ், அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு நாம் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என பும்ரா ஆசைப்படுகிறார். இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா செய்ததும், மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக டி20 போட்டிகளில் பும்ரா செய்தது அற்புதம். நம் நாட்டிற்காக விளையாடுவதும், எப்போதும் ஆட்டத்தை மாற்றும் திறன் வாய்ந்தவருமான பும்ரா எங்களுடன் ஓய்வு அறையில் இருப்பது எங்களுக்கு பெருமை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

click me!