ஹசன் மஹ்மூத் புயலில் சிக்கிய இந்தியா: ஒருமணிநேரத்தில் 3 விக்கெட்டுகள் காலி- Pakistanஐ நினைவுபடுத்திய வங்கதேசம்

First Published | Sep 19, 2024, 12:35 PM IST

IND vs BAN Test, Hasan Mahmud: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்மூத் இந்திய அணியின் முன்னணி வீரர்களை வீழ்த்தி அசத்தினார். ரோகித் சர்மா, சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஹசன் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.

India vs Bangladesh 2024

பாகிஸ்தானை போன்று இந்திய அணி வீரர்களையும் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்மூத் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேசம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்கிறது. முதல்கட்டமாக இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியைப் பொறுத்த வரையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றிருந்த சர்ஃபராஸ் கான், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், துருவ் ஜூரெல் மற்றும் யாஷ் தயாள் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

மேலும், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

India vs Bangladesh 2024, Chennai Test

இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். எனினும், இந்திய அணிக்கு ரன் கணக்கை தொடங்கி வைத்த யஷஸ்வி நிதானமாக விளையாடி வருகிறார். ஆனால், முதல் பவுண்டரி அடித்து பவுண்டரி கணக்கை தொடங்கிய கேப்டன் ரோகித் சர்மா 6 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

இந்திய அணியின் 580ஆவது டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தோல்வியை விட அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா படைக்கும். ஆனால், வங்கதேசத்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இப்படி அடுத்தடுத்து இந்திய வீரர்கள் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர்.

Latest Videos


Hasan Mahmud

ரோகித் சர்மாவைத் தொடர்ந்து சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த விராட் கோலி அதிரடி ஷாட்டுகளை ஆடிய போதிலும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் கூட இல்லாமல் 6 ரன்னுக்கு ஆட்டமிழந்து வேதனை அளித்தார். கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பிய போதிலும் நிதானமாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடி ஷாட்டுக்கு ஆசைப்பட்டு கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

பாகிஸ்தானைப் போன்று இந்தியாவும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஹசன் மஹ்மூத் தற்போது போட்டி தொடங்கி ஒரு மணி நேரத்திற்குள்ளாக இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

India vs Bangladesh 2024, Hasan Mahmud

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் சேப்பாக்கத்தில் விளையாடி வரும் விராட் கோலி மொத்தமாக 422 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். போட்டி தொடங்கி ஒரே மணி நேரம் கூட முழுமையாக முடியாத நிலையில் வரிசையாக ரோகித் சர்மா, சுப்மன் கில் மற்றும் விராட் கோலியை சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கச் செய்துள்ளார் வங்கதேச வீரர் ஹசன் மஹ்மூத். 5 ஓவர்கள் வீசிய ஹசன் மஹ்மூத் 2 மெய்டன் உள்பட 6 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

உணவு இடைவேளைக்கு பிறகு திரும்ப வந்த ஹசன் மஹ்மூத் மீண்டும் ஒரு விக்கெட்டை எடுத்தார். ஆம், நிதானமாக விளையாடி வந்த ரிஷப் பண்ட் 52 பந்துகளில் 6 பவுண்டரி உள்பட 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வெறும் 24 வயதே ஆன வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹமூத் தற்போது வரையில் 9 ஓவர்கள் வீசி 3 மெய்டன் உள்பட 19 ரன்கள் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rohit Sharma, Virat Kohli, Shubman Gill, Rishabh Pant

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.

வங்கதேசம்:

ஷத்மன் இஸ்லாம், ஜாகீர் ஹசன், நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ (கேப்டன்), மோமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகீப் அல் ஹசன், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), தஸ்கின் அகமது, மெஹிடி ஹசன் மிராஸ், ஹசன் மஹ்மூத், நஹீத் ராணா

click me!