Noor Ahmad : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்விகளுக்கு சஞ்சு சாம்சன் காரணம் இல்லை. மாறாக, வெளிநாட்டு பந்துவீச்சாளர்களின் சொதப்பல் ஆட்டம்தான் காரணம் என முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் கூறியுள்ளார்.
சஞ்சு சாம்சன் இல்ல, சிஎஸ்கே தோல்விக்கு இவர் தான் காரணம்
ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகப்பெரிய தலைவலி சஞ்சு சாம்சன் இல்லை என இர்ஃபான் பதான் கூறியுள்ளார். சிஎஸ்கே அணிக்காக விளையாடிய முதல் மூன்று இன்னிங்ஸ்களிலும் சஞ்சுவால் இரட்டை இலக்க ரன்களைத் தாண்ட முடியவில்லை. ஆப்கானிஸ்தானின் மிஸ்டரி ஸ்பின்னர் நூர் அஹமதுதான் சிஎஸ்கே-வின் தோல்விக்கு முக்கிய காரணம் என பதான் கூறுகிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் 43 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோற்ற பிறகு, பதான் இந்தக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
25
சஞ்சு சாம்சன் இல்ல, சிஎஸ்கே தோல்விக்கு இவர் தான் காரணம்
போன சீசனில் 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி, சிஎஸ்கே பவுலிங்கின் துருப்புச்சீட்டாக இருந்தவர் நூர் அஹமது. ஆனால், இந்த சீசனில் அவரது ஆட்டம் முற்றிலும் மங்கிப்போயுள்ளது. இந்த சீசனில் நூர் அஹமது இதுவரை 10 ஓவர்கள் வீசி 100 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளார். ஆனால், ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அவரது எக்கானமி ரேட் 11.1 ஆக உள்ளது, இது மிகவும் மோசம். நூரின் ரன்-அப்பில் உள்ள பிழைகள்தான் அவரது பந்துவீச்சின் திசையைத் தவறாக மாற்றுகிறது என பதான் கூறினார். ரன்-அப் ஆங்கிளை சரிசெய்தால், பந்துவீசும் கையை நேராக்கி, செயல்திறனை மேம்படுத்த முடியும் என்று பதான் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.
35
சிஎஸ்கே தோல்விக்கு காரணம் (Reasons for CSK loss today)
நூரைத் தவிர, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றியையும் பதான் விமர்சித்துள்ளார். அனுபவமிக்க ஒரு வெளிநாட்டு வீரரிடமிருந்து இவ்வளவு மோசமான ஆட்டத்தை எதிர்பார்க்கவில்லை என்றார். விராட் கோலி கிரீஸை விட்டு வெளியே வருவதைப் பார்த்த பிறகும் ஹென்றி 'ஹாஃப் வாலி' பந்து வீசியது பெரிய தவறு என பதான் சுட்டிக்காட்டினார்.
45
நூர் அகமது சிஎஸ்கே (Noor Ahmad CSK IPL 2026)
18-வது ஓவரில் டிம் டேவிட்டை அன்ஷுல் காம்போஜ் போல்டாக்கினார், ஆனால் அந்தப் பந்து நோ-பால் ஆனது பின்னடைவை ஏற்படுத்தியது. அதன்பிறகு, அன்ஷுல் காம்போஜும், ஜேமி ஓவர்டனும் தொடர்ந்து ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே பந்துவீசி, டேவிட் அடித்து ஆட வாய்ப்பு கொடுத்தனர். டேவிட்டை கட்டுப்படுத்த மிடில் ஸ்டம்ப் அல்லது லெக் ஸ்டம்பில் பந்து வீசியிருக்க வேண்டும், அந்த வாய்ப்பை சென்னை கோட்டை விட்டது என பதான் கூறினார்.
55
Noor Ahmad performance in CSK 2026
சஞ்சு சாம்சனின் ஃபார்ம் இல்லாதது பற்றி விவாதிக்கப்பட்டாலும், சென்னையின் உண்மையான பிரச்சனை பந்துவீச்சில் உள்ள இந்த ஓட்டைகள்தான் என்று பதான் அடித்துச் சொல்கிறார். விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோற்ற சென்னை, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.