IPL 2026: RCB vs GT மேட்ச் மழையால் ரத்தானால் பைனலுக்கு யாருக்கு வாய்ப்பு! ரிசர்வ் டே உண்டா?

Published : May 25, 2026, 10:28 PM IST

RCB vs GT: ஐபிஎல் 2026 தொடரின் குவாலிஃபையர்-1 போட்டியில் ஆர்சிபி குஜராத் டைட்டன்ஸ் மேட்ச் மழையால் ரத்தானால் யார் பைனல் செல்ல அதிக வாய்ப்புள்ளது. ரிசர்வ் டே உண்டா? என்பது குறித்து பார்ப்போம்.

PREV
14
குவாலிஃபையர்-1 போட்டியில் ஆர்சிபி, குஜாரத் டைட்டன்ஸ் மோதல்

2026 ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிந்து விட்டன. மே 26-ஆம் தேதி அதாவது நாளை முதல் பிளேஆஃப் போட்டிகள் தொடங்க உள்ளன. தர்மசாலாவில் நடக்கப்போகும் குவாலிஃபையர்-1 போட்டியில் பாயின்ட்ஸ் டேபிளில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும் குஜராத் டைட்டன்ஸும் மோத உள்ளன. இந்த போட்டியில் ஜெயிக்கிற டீம் நேராக ஃபைனலுக்குப் போகும். தோற்கும் அணிக்கு குவாலிஃபையர் இரண்டில் இன்னொரு வாய்ப்பு உள்ளது.

24
மழை குறுக்கிட்டால் யாருக்கு லாபம்?

ஆனால், ஒருவேளை மழையால் மேட்ச் ரத்தானால் என்ன ஆகும்? யாருக்கு சாதகம்? குவாலிஃபையர்-1 போட்டிக்கு ரிசர்வ் டே உள்ளதா? இப்படி நிறைய கேள்விகள் ரசிகர்களிடம் உள்ளது. ஒருவேளை குவாலிஃபையர் 1 போட்டி மழையால் ரத்தானால் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஃபைனலுக்குப் போறதுக்கு ஒரு கோல்டன் சான்ஸ் கிடைக்கும். ஏன் என்றால் லீக் சுற்று முடிவில் RCB அணிதான் பாயின்ட்ஸ் டேபிளில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக ஐபிஎல் பிளேஆஃப்ல எந்த போட்டிக்கும் ரிசர்வ் டே கிடையாது. ஃபைனல் போட்டிக்கு மட்டும்தான் ஒரு ரிசர்வ் டே ஒதுக்கியிருக்கிறார்கள்.

34
இரண்டு பலம்வாய்ந்த அணிகள்

இதனால் லீக் சுற்று முடிவில் பாயின்ட்ஸ் டேபிளில் எந்த அணி மேல இருக்கிறதோ, அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தொடர் வெற்றிகளால் செம ஃபார்மில் உள்ளது. ஒருவேளை மழையால் குவாலிஃபையர்-1 போட்டி ரத்தானால் குஜராத்தின் வெற்றிப் பயணத்துக்கு ஒரு சின்ன பிரேக் விழும். ஆனால் எலிமினேட்டரில் ஜெயிக்கும் அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் மறுபடியும் மோத வேண்டியிருக்கும்.

ரஜத் பாட்டீதார் தலைமையிலான நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்தத் தொடர் முழுக்கவே சிறப்பாகவே விளையாடி வந்துள்ளது. இப்போது தொடர்ச்சியாக‌ இரண்டாவது முறையாக ஐபிஎல் ஃபைனலுக்குள்ள நுழைய ரெடியாக உள்ளது. 

44
ஆர்சிபி கேப்டன் நம்பிக்கை

இந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபயர் 1 போட்டிக்கு முன்னதாக பேசிய ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார், நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக செயல்படும் அணியே வெற்றி பெறும் என்றும், தங்கள் அணியின் பலம் பந்துவீச்சுதான் என்றும் அவர் கூறியுள்ளார். தற்காப்பு ஆட்டம் ஆடும் எண்ணம் இல்லை, தாக்குதல் நடத்துவதே எங்கள் திட்டம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

"எங்கள் பலமே பந்துவீச்சுதான். பவர்பிளேயில் நாங்கள் எப்படி பந்து வீசுகிறோம் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும்," என்றார். "நாங்கள் தற்காப்பு ஆட்டம் ஆட இங்கு வரவில்லை, தாக்குதல் நடத்தும் மனநிலையுடன் தான் வந்துள்ளோம் என்பது அணியில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தவே முயற்சிப்போம். புவி, ஹேசில்வுட் மற்றும் ரசிக் ஆகியோர் அதைத்தான் செய்து வருகிறார்கள். அதே வழியில் தொடர விரும்புகிறோம்" என்றும் அவர் கூறினார்.

Read more Photos on
click me!

Recommended Stories