KKR vs RCB IPL 2025 Live Score : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 தொடர் இன்று கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், ஷ்ரேயா கோஷல், திஷா பதானி, கரண் அவுஜ்லா ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் போடப்பட்ட டாஸில் ஐபிஎல் 2025 தொடரில் ஒரு கேப்டனாக அறிமுகமாகும் தனது முதல் போட்டியிலேயே ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.
Ajinkya Rahane, Rajat Patidar, IPL 2025, KKR vs RCB
அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் குயீண்டன் டி காக் மற்றும் சுனில் நரைன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், டி காக் பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கினார். எனினும் அவர் 4 ரன்னிலேயே ஜோஷ் ஹசில்வுட் ஓவர் ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய கேப்டன் அஜிங்க்யா ரஹானே அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதோடு ஒரு கேப்டனாக தனது அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
Kolkata Knight Riders, IPL 2025, KKR vs RCB
இதே போன்று அதிரடியாக விளையாடி வந்த சுனில் நரைன் 26 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்ஸர் உள்பட 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து கேப்டன் அஜிங்க்யா ரஹானேவும் 31 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் ஐயர் 6, ரிங்கு சிங் 12, ஆண்ட்ரே ரஸல் 4 என்று கேகேஆர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
Royal Challengers Bengaluru, IPL 2025
கொல்கத்தா அணியானது முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டிற்கு 107 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்த 5 ஓவருக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்கள் எடுத்திருந்தது. பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க கேகேஆர் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி 30 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.
IPL 2025 KKR vs RCB Live Score
பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆர்சிபி அணியில் குர்ணால் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். யாஷ் தயாள், ராசிக் தார் சலாம் மற்றும் சுயாஷ் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். ஜோஷ் ஹசில்வுட் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 174 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விளையாடி வருகிறது. விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஐபிஎல் 2025, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரஜத் படிதார், கேகேஆர், ஆர்சிபி, ஸ்போர்ட்ஸ் நியூஸ் தமிழ், டி20 கிரிக்கெட், கேகேஆர் vs ஆர்சிபி, ஈடன் கார்டன், கொல்கத்தா, KKR vs RCB, IPL 2025, IPL 2025 Opening Ceremony, Eden Gardens, Kolkata, Kolkata Knight Riders, Indian Premier League, Virat Kohli, Ajinkya Rahane, Rajat Patidar, Royal Challengers Bengaluru, IPL 2025 KKR vs RCB Live Score, Krunal Pandya