ஐபிஎல்லில் கொடிகட்டி பறக்கும் OLD IS GOLD ஆக தங்களது திறமையை நிரூபிக்கும் சீனியர்ஸ்!

First Published | Apr 24, 2023, 5:30 PM IST

ஐபிஎல் கிரிக்கெட்டில் அஜின்க்யா ரஹானே, அமித் மிஸ்ரா, பியூஷ் சாவ்லா, இஷாந்த் சர்மா, மோகித் சர்மா ஆகியோர் இடம் பெற்று தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடந்து வருகிறது. டெஸ்ட், ஒருநாள் போட்டி இல்லாமல் சற்று மாறுபட்ட விளையாட்டாக ஐபிஎல் திகழ்ந்து வருகிறது. அதாவது, அதிரடி ஆட்டம், நீயா, நானா என்பது போன்று ஒவ்வொரு வரும் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும்.

மும்பை இந்தியன்ஸ்

வீரர், பேட்ஸ்மேனாக இருந்தால் அவர் தனது அணிக்காக அதிரடியாக ஆடி சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து அணிக்கு வெற்றி கொடுக்க வேண்டும். இதுவே பவுலராக இருந்தால் அவர் ரன்னும் கொடுக்காமல் விக்கெட் கைப்பற்ற வேண்டும்.

Tap to resize

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

அப்படி பார்க்கையில் சீனியர் வீரர்கள் இந்த ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழாவில் இடம் பெற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில், ரஹானே, மிஸ்ரா, பியூஷ் சாவ்லா, இஷாந்த் சர்மா, மோகித் சர்மா ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

ரஹானே: ரூ.5.25 கோடியிலிருந்து ரூ.50 லட்சம்

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்ற ரஹானேவிற்கு அந்த அணியில் போதுமான வாய்ப்புகள் அமையவில்லை. 2012 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார். இதையடுத்து 2016 ஆம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட் அணியில் இடம் பெற்று விளையாடினார். அதன் பிறகு மீண்டும் 2018 ஆம் ஆண்டு ரூ.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றார். 2020 ஆம் ஆண்டு ரூ.5.25 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டு ரூ.1 கோடிக்கு கொல்கத்தா அணியில் விளையாடிய ரஹானேவை இந்த ஆண்டு சென்னை அணி ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு தற்போது OLD IS GOLD ஆக யாரெல்லாம் தன்னை துரத்தி அடித்தார்களோ அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.
 

பியூஷ் சாவ்லா:ரூ.6.75 கோடியிலிருந்து ரூ.50 லட்சம்

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்று விளையாடினார். 2014 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றார். 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கொல்கத்தா அணியில் இடம் பெற்று விளையாடினார். 2020 ஆம் ஆண்டு ரூ.6.75 கோடிக்கு சென்னை அணி அவரை ஏலத்தில் எடுத்தது. ஆனால், அதில் 7 போட்டிகளில் விளையாடி வெறும் 6 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றினார். 2021 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் ரூ.2.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 2022 ஆம் ஆண்டு யாரும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. இந்த நிலையில் ரூ.50 லட்சத்திற்கு மும்பை அணி அவரை ஏலத்தில் எடுத்துள்ளது. தற்போது வரையில் 6 போட்டிகளில் விளையாடிய பியூஷ் சாவ்லா 9 விக்கெட்டுகள் கைப்பற்றி OLD IS GOLD ஆக தன்னை நிரூபித்து வருகிறார்.

அமித் மிஸ்ரா: ரூ.4 கோடியிலிருந்து ரூ.50 லட்சம்

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2020 வரையில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடிய அமித் மிஸ்ரா, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் டெக்கான் சார்ஜஸ் அணிக்காக விளையாடினார். 2013 -14 ஆம் ஆண்டுகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றார். 2015 முதல் 21 வரையில் ரூ.4 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றார். 2022 ஆம் ஆண்டு எந்த அணியிலும் அவர் இடம் பெறவில்லை. தற்போது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ரூ.50 லட்சத்திற்கு இடம் பெற்று OLD IS GOLD ஆக தன்னை நிரூபித்து வருகிறார்.

இஷாந்த் சர்மா: ரூ.1.10 கோடியிலிருந்து ரூ.50 லட்சம்

இஷாந்த் சர்மா கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2018 வரையில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார். அதன் பிறகு 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் ரூ.1.10 கோடிக்கு டெல்லி அணியில் இடம் பெற்று விளையாடினார். இதையடுத்து 2022 ஆம் ஆண்டு அவர் ஏலத்தில் எடுக்கபடாத நிலையில் இந்த ஆண்டு ரூ.50 லட்சத்திற்கு டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது வரையில் ஒரு போட்டியில் விளையாடியுள்ள இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதுமட்டுமின்றி இந்தப் போட்டியில் ஆட்டநாயகனாகவும் தேர்வானார். OLD IS GOLD ஆக தன்னை நிரூபித்து வருகிறார்.

மோகித் சர்மா: ரூ.5 கோடியிலிருந்து ரூ.50 லட்சம்

கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னை அணியில் இடம் பெற்று 15 போட்டிகளில் 23 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் அணி 2.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 2019 ஆம் ஆண்டு சென்னை அணி ரூ.5 கோடிக்கு வாங்கியது. 2020 ஆம் ஆண்டு டெல்லி அணியில் ரூ.50 லட்சத்திற்காக இடம் பெற்று விளையாடினார். அதன் பிறகு 2 ஆண்டுகள் அவரை எந்த அணியும் வாங்கவில்லை. தற்போது ரூ.50 லட்சத்திற்கு குஜராத் டைட்டன்ஸ் அணி விலைக்கு வாங்கியது. இந்த அணிக்காக 3 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். ஒரு போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்று OLD IS GOLD ஆக தன்னை நிரூபித்து வருகிறார்.

Latest Videos

click me!