சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வா? கேஎல் ராகுல் அக்கவுண்டிலிருந்து தீயாக பரவும் பதிவால் குழப்பம்!

First Published | Aug 23, 2024, 11:16 AM IST

இந்திய அணியின் விக்கெட் கீப்பரான கேஎல் ராகுல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

KL Rahul

இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான கேஎல் ராகுல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக இணையத்தில் பரவும் இன்ஸ்டா பதிவால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட்டில் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்காத நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இது உண்மையான பதிவு இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

KL Rahul Wicket Keeper

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருபவர் கேஎல் ராகுல். இதுவரையில் 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2863 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று, 75 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2820 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 72 டி20 போட்டிகளில் விளையாடி 2265 ரன்கள் எடுத்துள்ளார்.

Latest Videos


Wicket Keeper KL Rahul

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட கேஎல் ராகுலுக்கு அதன் பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் திரும்பி வந்ததைத் தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

Indian Cricket Team

இதன் காரணமாக கேஎல் ராகுலுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்தது. இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பர்கள் அடுத்தடுத்த வரிசையில் நிற்கும் நிலையில் கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் கேஎல் ராகுல் அக்கவுண்டிலிருந்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று அறிவிப்பது போன்ற ஒரு பதிவு வைரலாகி வருகிறது.

KL Rahul Retirement News

உண்மையில் அந்து ராகுல் பதிவிட்ட பதிவுதானா? அல்லது பொய்யான தகவலா என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். எனினும், வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் துலீப் டிராபி தொடரில் கேஎல் ராகுல் இடம் பெற்று விளையாட இருக்கிறார். இதில், அவர் தனது திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

KL Rahul Retirement

இதன் மூலமாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக ராகுல் தடுமாறி வந்தார். இதன் காரணமாக அந்த அணியின் உரிமையாளருக்கும், ராகுலுக்கும் இடையில் மைதானத்திலேயே விவாதம் ஏற்பட்டது

KL Rahul

இதன் மூலமாக 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக லக்னோ அணியிலிருந்து கேஎல் ராகுல் விடுவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!