இந்தியாவை தோற்கடிக்க இதுதான் வழி; ஆஸி.,யின் குறுக்குபுத்தி.! பிரிஸ்பேனுக்குலாம் வரமுடியாது.. இந்திய அணி அதிரடி

First Published Jan 3, 2021, 2:58 PM IST

இந்திய அணி மீது கூடுதல் அழுத்தம் போடும் விதமாக 4வது டெஸ்ட் நடக்கவுள்ள பிரிஸ்பேனில் இந்திய வீரர்களை மீண்டும் குவாரண்டினில் வைக்க முயற்சிக்கிறது ஆஸ்திரேலியா. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூடுதல் குவாரண்டின் விதித்தால், பிரிஸ்பேனுக்கு செல்ல முடியாது என்று இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துவிட்டது.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸி., அணியும் 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில், 3வது டெஸ்ட் வரும் 7ம் தேதி சிட்னியின் தொடங்குகிறது. கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடக்கவுள்ளது.
undefined
சிட்னி டெஸ்ட்டுக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், மெல்போர்ன் ஹோட்டலில் ஒன்றாக இணைந்து சாப்பிட்ட ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, நவ்தீப் சைனி, ஷுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகிய ஐவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா விதிமுறைகளை மீறினார்களா என பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா விசாரித்தது.
undefined
இதற்கிடையே, சிட்னியில் நடக்கும் 3வது டெஸ்ட் முடிந்து 4வது டெஸ்ட் போட்டி நடக்கும் பிரிஸ்பேனில் இந்திய வீரர்கள் மீண்டும் சில நாட்கள் குவாரண்டினில் வைக்கப்படுவார்கள் என்று குயின்ஸ்லாந்து(பிரிஸ்பேன் இருக்கும் மாகாணம்) அரசு தெரிவித்துள்ளது. சிட்னிக்கு கிளம்பும் முன், துபாயிலும், பின்னர் சிட்னியிலும் தலா 2 வாரங்கள் என மொத்தமாக கிட்டத்தட்ட ஒரு மாத காலம் குவாரண்டினில் இருந்த இந்திய வீரர்கள், பிரிஸ்பேனில் மீண்டும் குவாரண்டினில் இருக்க விரும்பவில்லை.
undefined
குவாரண்டின் என்ற பெயரில் தங்கள் மீது போடப்படும் அழுத்தம் என்றுதான் இதை இந்திய வீரர்கள் பார்க்கின்றனர். 2வது டெஸ்ட்டில் ரஹானே தலைமையிலான இந்திய அணி, கோலி, ஷமி ஆகிய நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லாமலேயே ஜெயித்தது. ஆஸி., அணியிலோ தொடக்க வீரர் சிக்கல், ஸ்மித் ஃபார்மில் இல்லாதது என பல சிக்கல்கள் இருக்கும் நிலையில், இந்திய அணியை வீழ்த்த குவாரண்டின் என்ற பெயரில் அழுத்தம் போட முயற்சிக்கிறது ஆஸி.,. இதுமாதிரியான வெளி விஷயங்கள் மூலம் அழுத்தம் போடுவதை கடந்த காலங்களிலும் செய்திருக்கிறது.
undefined
இந்திய வீரர்கள் துபாயிலும், பின்னர் சிட்னியிலும் குவாரண்டினில் இருந்ததை சுட்டிக்காட்டி, பிரிஸ்பேனில் மீண்டும் குவாரண்டினில் இருக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ள இந்திய அணி நிர்வாகம், ஆஸி., வீரர்களை போலவே இந்திய வீரர்களையும் நடத்தவேண்டும் என்றும், மீண்டும் குவாரண்டினில் வீரர்கள் வைக்கப்படுவார்களேயானால் பிரிஸ்பேனுக்கு வரமுடியாது; வேண்டுமென்றால் சிட்னியிலே கடைசி டெஸ்ட்டையும் நடத்துமாறு இந்திய அணி நிர்வாகம் உறுதியாக தெரிவித்துவிட்டது.
undefined
click me!