Shiva Chants Echoed In The Indian Team Dressing Room
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் டிரா செய்து சாதனை படைத்தது. சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்கள் கொண்ட அணி இந்த சாதனையை நிகழ்த்தி காட்டியது. அதுவும் ஓவலில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் தோல்வியின் பிடியில் இருந்த இந்திய அணி முகமது சிராஜின் அசாத்தியமான பவுலிங்கால் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.
24
இந்திய அணி டிரஸ்ஸிங் ரூமில் ஒலித்த சிவ ஸ்துதி
இந்நிலையில், இந்த வெற்றிக்கு கடைசி டெஸ்ட் போட்டி நடந்த ஐந்து நாட்களும் இந்திய அணி டிரஸ்ஸிங் ரூமில் சிவ ஸ்துதி (சிவன் பாடலிசை) ஒலித்தது தான் காரணம் என இந்திய அணி வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். முதல் நான்கு டெஸ்ட்களுக்குப் பிறகு இந்தியா 1-2 என பின்தங்கியிருந்தது. ஐந்தாவது டெஸ்டில் தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்ற நிலையில் இந்திய அணி களமிறங்கியது. டாஸ் தோல்வியடைந்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் அழுத்தம் அதிகரித்தது.
இந்திய அணி வீரர் சொன்ன தகவல்
இந்த நேரத்தில்தான் அணியின் துணை பயிற்சியாளர் ரகு என்கிற ராகவேந்திரா டிரஸ்ஸிங் ரூமில் ஸ்பீக்கரில் சிவ ஸ்துதியை (சிவன் பாடலிசை) ஒலிக்கவிட்டார். இது வீரர்களின் மனதை அமைதிப்படுத்தியதாகவும், முதல் நாள் முதல் கடைசி நாள் வரை சிவ ஸ்துதியை ஒலிக்கவிடுவது வழக்கமானதாகவும், பெயர் வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையின் பேரில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்த இந்திய வீரர் ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
34
சிவ ஸ்துதியை ஒலிக்கவிடுவது வழக்கம்
இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமில் சிவ ஸ்துதி ஒலித்ததால் வீரர்கள் மற்றும் துணை ஊழியர்களின் மன அழுத்தம் நீங்கியதாகவும் அந்த வீரர் தெரிவித்தார். டிரஸ்ஸிங் ரூமில் சிவ ஸ்துதியை ஒலிக்கவிடுவது முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை. ஆனால் ஒரு முறை ஒலிக்கவிட்ட பிறகு அது வழக்கமானதாகிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
வீரர்களை உற்சாகப்படுத்தியது
இதேபோல் போட்டியின் போது டிரஸ்ஸிங் ரூமில் ஹனுமான் சாலிசா போன்ற பக்தி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டிருந்தாலும், சிவ ஸ்துதி ஒலிக்கவிடப்பட்டது இதுவே முதல் முறை என மற்றொரு அணி உறுப்பினர் தெரிவித்தார். ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக டிரஸ்ஸிங் ரூமில் உரத்த சத்தத்தில் சிவருத்ராஷ்டகம் ஒலித்தது வீரர்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது என மற்றொரு வீரர் தெரிவித்தார். இது வீரர்களை மேலும் உற்சாகப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
துளசிதாஸ் சமஸ்கிருதத்தில் இயற்றிய சிவருத்ராஷ்டகம் மந்திரம்தான் டிரஸ்ஸிங் ரூமில் ஒலிக்கவிடப்பட்டது. இது வீரர்களை உள் மனதளவில் வலிமையானவர்களாகவும், கவனம் செலுத்தும் ஆற்றல் கொண்டவர்களாகவும் மாற்றியதுடன், தீய சக்திகளின் தாக்கத்தில் இருந்து விடுபடவும் உதவியது என்பது அணி வீரர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.