List Of Indian Cricketers Who Are Successfully Running The Hotel Business
இந்தியாவில் கிரிக்கெட் வெறும் விளையாட்டாக மட்டுமின்றி மதம் போல் வைத்து பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டில் மட்டுமின்றி பல்வேறு பிராண்ட்களுக்கு விளம்பரம் செய்தும் கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர்.
சம்பாதிக்கும் பணத்தை ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் முதலீடு செய்து வருகின்றனர். சில பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் ஹோட்டல் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஹோட்டல் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வரும் வீரர்கள் மற்றும் நஷ்டத்தால் அதனை மூடிய வீரர்கள் குறித்து பார்ப்போம்.
24
முகமது சிராஜ், விராட் கோலி
இப்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பவுலிங்கில் அசத்தி வரும் முகமது சிராஜ் ஹைதராபாத் நகரில் ஜோஹர்பா என்ற ஒரு ஹோட்டலை திறந்துள்ளார். 'ஹைதராபாத் எனக்கு அடையாளத்தைக் கொடுத்தது.
இந்த ஹோட்டல் மூலம் முகலாய் மசாலாப் பொருட்கள், பாரசீக மற்றும் அரேபிய உணவுகள் மற்றும் சீன உணவு வகைகளை வழங்க முடியும்' என சிராஜ் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி One8 Commune என்ற பிரபலமான ஹோட்டலை நடத்தி வருகிறார். இது டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா போன்ற நகரங்களில் பல கிளைகளை கொண்டுள்ளது. இது கான்டினென்டல், மத்திய தரைக்கடல் மற்றும் ஆசிய உணவு வகைகளை வழங்குகிறது.
34
ரெய்னா, ஜடேஜா
சுரேஷ் ரெய்னா நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் Raina Indian Restaurant என்ற பெயரில் ஒரு ஹோட்டலை தொடங்கியுள்ளார். ரவீந்திர ஜடேஜா குஜராத்தின் ராஜ்கோட்டில் Jaddoo's Food Field ஹோட்டலை நடத்தி வருகிறார்.இது இந்திய, தாய், சீன உணவு வகைகளை வழங்குகிறது.
ஜாகீர் கான், கபில்தேவ்
ஜாகீர் கான் புனேவில் Dine Fine என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். புனேவில் அமைந்துள்ள இந்த உணவகம் பல ஆண்டுகளாக நல்ல பெயரைப் பெற்றுள்ளது. இதேபோல் அவர் The Sports Lounge என்ற பாரையும் நடத்தி வருகிறார். கபில் தேவ் பாட்னாவில் Elevensஎன்ற உணவகத்தை நடத்தி வருகிறார். இந்த உணவகம் இந்தியன், பான் ஏசியன் மற்றும் கான்டினென்டல் உணவு வகைகளை வழங்குகிறது.
ஷிகர் தவான் துபாயில் ஜுமேராவில் Flying Catch Sports Cafe என்ற ஹோட்டலை திற்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அம்பத்தி ராயுடு Barroos & AndRooms என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். மேற்கண்ட முன்னாள், இந்நாள் வீரர்கள் வெற்றிகரமாக ஹோட்டல் தொழிலை நடத்தி வருகின்றனர். சில வீரர்கள் நஷ்டத்தால் ஹோட்டலை மூடியுள்ளனர். அவர்கள் குறித்தும் பார்ப்போம்.
கங்குலி, சச்சின், சேவாக்
கிரிக்கெட்டின் தாதா சவுரவ் கங்குலி கொல்கத்தாவில் "சௌரவ்ஸ்: தி ஃபுட் பெவிலியன்" என்ற உணவகத்தைத் தொடங்கினார். ஆனால் இந்த ஹோட்டல் சரியாக செல்லாததால் 2011ல் இதை இழுத்து மூடினார். அதிரடி மன்னன் வீரேந்திர சேவாக் டெல்லியில் "ஷேவாக்ஸ் ஃபேவரெட்ஸ்" என்ற உணவகத்தைத் திறந்தார்.
ஆனால் சில மாதங்களிலேயே இது மூடப்பட்டது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் "சச்சின்ஸ்" என்ற பெயரில் ஒரு ஹோட்டலை நடத்தி வந்தார். ஆனால் நஷ்டம் காரணமாக பின்பு அது இழுத்து மூடப்பட்டது.