எந்த சொந்தமும் பேசல, உதவல.. எங்கள யாரும் மதிக்கல.. கேவலமா பாத்தாங்க: இந்தியா கிரிக்கெட்டர் நடராஜன் அம்மா

First Published Dec 7, 2020, 7:36 AM IST

இந்திய அணிக்காக தனது முதலாவது டி20 போட்டியில், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை வெள்ளிக்கிழமை வீழ்த்தி அசத்தியிருக்கிறார், சேலம் - சின்னப்பம்பட்டியை சேர்ந்த நடராஜன் ஒட்டு மொத்த உலகமும் நடராஜனை பாராட்டி வாழ்த்தும் இந்த நேரத்தில் நடராஜன் தயார் அவர்கள் கடந்து வந்த வேதனை சோதனைகள் பற்றி பேசியுள்ளார் 
 

கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் நடராஜன் ஈர்த்து வரும் அதே சமயம், சத்தமே இல்லாமல் அமைதியாக சின்னப்பம்பட்டியில் மகனின் விளையாட்டுத்திறனை அவரது குடும்பத்தினர் ரசித்து வருகிறார்கள்.
undefined
இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி விளையாடி வரும் வேளையிலும், அப்பா கூலி நெசவாளியாகவும், அம்மா கறிக் கடையில் சில்லி போட்டு விற்பனை செய்பவராகவும் எந்த அடையாளமும் மாறாமல் அப்படியே உள்ளனர்
undefined
இது குறித்து நடராஜன் தயார் கூறுகையில் -எங்களுக்கு ஐந்து பிள்ளைகள். மூத்த பையன்தான் நடராஜன். நடராஜனின் இளமைக்காலம் மிகவும் கஷ்டமான காலமாகவே இருந்தது. ஆரம்பத்தில் நாங்கள் தறி ஓட்டிதான் பிழைப்பை ஓட்டினோம். பின்பு வீட்டுக்கு ஒட்டியதுபோலவே இந்த கடையை ஆரம்பித்தேன். பதினைந்து வருஷமாய் நல்ல சோறு சாப்பிடாமல் கஷ்டப்பட்டுத்தான் முன்னேறியுள்ளான்
undefined
எங்களது குடும்பப்பொருளாதாரத்தை கொண்டு நடராஜனை பன்னிரண்டாம் வகுப்பு வரைதான் படிக்க வைக்க முடிந்தது. அதன் பின்பு, அவனுடைய நண்பர் ஜெயப்பிரகாஷ் தான் எல்லா வகையிலும் வழிகாட்டினார். நடராஜன் கல்லூரியில் சேர்ந்தபோது பஸ்ஸுக்கு ஐந்து ரூபாய் காசு கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு இருக்கிறோம்
undefined
இதுவரை எங்களை மதிக்காத ஊர் மக்கள் கூட, இப்போது அவர்களாகவே வந்து பேசுகிறார்கள். நடராஜன் இன்னும் நல்ல விளையாட வேண்டும் என்று பாராட்டுகிறார்கள். உங்கள் பையன்தானா என்று ஆச்சரியத்தோடு கேட்கிறார்கள்
undefined
click me!