கேஎல் ராகுலின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியத்தை சொல்லும் டாட்டூஸ்!

First Published Jan 23, 2023, 12:28 PM IST

இந்தியன் கிரிக்கெட்டர் கேஎல் ராகுல் வரைந்துள்ள டாட்டூ அவரது தனிப்பட்ட வாழ்க்கை ரகசியத்தை சொல்லும் விதமாக அமைந்துள்ளது.

ஆந்தை

கிரிக்கெட் விளையாடும் போது எதிரிகளை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விவேகம் மற்றும் புரிதல் ஆகியவற்றின் அடையாளமாக ஆந்தையை இடது கையில் டாட்டூ குத்தியுள்ளார்.

கண்

ராகுல் தனது இடது பைசெப்ஸ் பகுதியில் கண்ணை டாட்டூவாக வரைந்துள்ளது. இது, அவரது தாத்தா மற்றும் பாட்டி இருவரும் அவரை கண்காணித்துக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. அவரது வாழ்க்கையில் இருவரும் மிக முக்கியமானவர்கள். அவர்கள் தான் அவருக்கு நெருக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

பேட்மேன் ரசிகர்:

சூப்பர் ஹீரோ பேட்மேனின் தீவிர ரசிகர் என்பதால், வலது முன்கையில் எழுந்து செல்வது (எழுவதற்கு) என்று பொருள்படும் தேஷி பசாரா என்ற வார்த்தையை டாட்டூ குத்தியுள்ளார். அதோடு, கடந்த 2012 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பேட்மேன் படமான, தி டார்க் நைட் ரைஸை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் ரைஸ் அப் (எழுந்து செல்) என்பது குறிப்பிடத்தக்கது.

சாவி டாட்டூ - மேஷ ராசி

மேஷ ராசியை குறிக்கும் வகையில் அவரது இடது முன்கையில் ஆட்டின் கொம்பை டாட்டூவாக குத்தியுள்ளார். அதுமட்டுமின்றி புதிய அனுபவங்களை நோக்கி உற்சாகமாக இருக்க அவருக்கு ஒரு நிலையான நினைவூட்டலாக இருக்க வேண்டும் என்பதை சாவி பிரதிபலிக்கிறது. ஏனெனில் அவ்வாறு செய்வது அவரது திறனை வெளிப்படுத்த அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

284 மற்றும் 11

கேஎல் ராகுல் வலது பக்கம் உள்ள உடலில் 284 மற்றும் 11 என்று ரோமானிய எண்களில் எழுதப்பட்டிருக்கும். அதாவது, இந்தியாவின் 284ஆவது டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்பதை குறிக்கும் வகையில் 284 என்றும், அவர் கிரிக்கெட் விளையாட தேர்வு செய்யப்பட்ட போது அவரது ஜெர்சி நம்பர் 11 என்பதை குறிக்கும் வகையில் 11 என்றும் ரோமானிய எண்ணீல் டாட்டூ குத்தியுள்ளார்.
 

சிம்பா

கேஎல் ராகுல் நாய்கள் மீது அதிக அன்பு கொண்டவர். வீட்டில் சிம்பா என்ற நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அதனுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதனை முடித்துக் கொண்டு திரும்பி வந்த ராகுல் சிம்பாவின் படத்தை தனது முதுகில் டாட்டூ குத்தியிருந்தார்.

கேஎல் ராகுல் பிறந்த நேரம்:

கேஎல் ராகுல் பிறந்த நேரம் 11 மணி என்பதால், தனது இடது கையின் பைசெப்ஸ் பகுதியில் 11 மணியை சுட்டிக் காட்டி கடிகாரத்தை டாட்டூவாக வரைந்துள்ளார். அதுமட்டுமின்றி, கடிகாரத்தின் கீழே வேணி, விதி, விசி என்ற லத்தீன் வார்த்தை எழுதப்பட்டுள்ளது. இது கேஎல் ராகுல் ஏற்கனவே தொடங்கப்பட்டதாகவும், அவர் வில்லோவைக் கொண்டு இந்த உலகை ஆள முயற்சிக்கிறார் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

லோகேஷ் மற்றும் ராஜேஸ்வரி

உடல் முழுவதும் டாட்டூ குத்தியிருந்ததால், அதனை பார்த்து ராகுலின் பெற்றோர்கள் அதிகளவில் வருத்தப்பட்டுள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் இடது மற்றும் வலது மணிக்கட்டு பகுதியில் ராஜேஸ்வரி மற்றும் லோகேஷ் என்று டாட்டூ குத்தி அவர்களை சமாதானப்படுத்தியுள்ளார்.

கலங்கரை விளக்கம்:

பெங்களூருவில் பிறந்த கேஎல் ராகுல் மங்களூருவில் கடற்கரையோரத்தில் உள்ள அவரது வீட்டில் வளர்ந்துள்ளார். அங்கு பள்ளிப் படிப்பை முடித்த ராகுல் மறுபடியும் பெங்களூருக்கு சென்று அங்கு கல்லூரி படிப்பை தொடர்ந்தார். தனது இளமைகால பருவத்தை நினைவு கூறும் வகையில் வீட்டிற்கு அருகில் இருந்த கலங்கரை விளக்கத்தை இடது முன் கையில் டாட்டூ (பச்சை) குத்தியுள்ளார்.

click me!