முழு வீச்சில் நடக்கும் திருமண ஏற்பாடுகள்: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கே எல் ராகுல் வீடு!

First Published | Jan 18, 2023, 10:01 AM IST

இந்திய கிரிக்கெட் வீரர் கே எல் ராகுலுக்கும் அவரது நீண்ட நாள் காதலியும் நடிகையுமான அதியா ஷெட்டிக்கும் வரும் 23 ஆம் தேதி திருமணம் நடக்க உள்ள நிலையில் திருமண ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
 

கே எல் ராகுல் - அதியா ஷெட்டி காதல்

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி ஆகிய இருவரும் காதலித்து வருகின்றனர்.

கே எல் ராகுல் காதல்

கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வரும் நிலையில், கே எல் ராகுலுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதியா ஷெட்டியுடன் நேரம் செலவிட்டு வந்துள்ளார். இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Tap to resize

ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாட்டம்

தமிழ் சினிமாவில் 12பி, தர்பார் ஆகிய படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் தான் பாலிவுட் நடிகையான அதியா ஷெட்டி. இவர், ஹீரோ, முபாரகான், மோட்டிஜோர் சக்னாஜோர், நவாப்ஷாடே ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இருவரும் துபாய் சென்று அங்கு ஒன்றாக புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.

கே எல் ராகுல் திருமணம்

இந்த நிலையில், வரும் 23 ஆம் தேதி கே எல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி ஆகியோருக்கு திருமணம் நடக்க இருக்கிறது. இந்த திருமணம் தேதி குறித்து முறையான அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை. ஆனால், அதியா ஷெட்டியின் விக்கிப்பீடியா பக்கத்தில் முதலில் குறிப்பிடப்பட்டு பின்னர் அது நீகக்ப்பட்டது.

கண்டாலா

மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் வைத்து இவர்களது திருமணம் நடக்க இருக்கிறது.

சங்கீத நிகழ்ச்சி

திருமணத்திற்கு முன்னதாக வரும் 21 ஆம் தேதி சங்கீத நிகழ்ச்சியும், மெஹந்தி நிகழ்ச்சியும் நடக்கிறது. அதியா ஷெட்டியின் சகோதரர் மற்றும் பெற்றோர்களும் இந்த சங்கீத நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

கே எல் ராகுல் வீடு

கே எல் ராகுல் அதியா ஷெட்டி திருமண ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. திருமணத்தை முன்னிட்டு கே எல் ராகுல் குடியிருக்கும் வீடு முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. 
 

கிரிக்கெட், சினிமா பிரபலங்கள் பங்கேற்பு

இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் ஓகே சொன்னதைத் தொடர்ந்து இந்த திருமணம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமண நிகழ்ச்சியில் விராட் கோலி, எம் எஸ் தோனி, அக்‌ஷய் குமார், ரோகித் சர்மா, சல்மான் கான், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் பலர் கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.
 

நியூசிலாந்து தொடர்:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் கே எல் ராகுல் இடம் பெறவில்லை. குடும்பத்தில் உள்ள கடமைகள் காரணமாக அவர் இந்த தொடரில் கலந்து கொள்ளவில்லை என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி

நியூசிலாந்து தொடரைத் தொடர்ந்து இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் கே எல் ராகுல் இடம் பெற்றுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்ட்டியில் கே எல் ராகுல் இடம் பெற்றுள்ளார்.
 

பிசிசிஐ

இதே போன்று தான் அக்‌ஷர் படேலும் குடும்ப கடமைகள் காரணமாக அவர் நியூசிலாந்து தொடரில் இடம் பெறவில்லை என்று பிசிசிஐ குறிப்பிட்டிருந்தது. தற்போது அக்‌ஷர் படேலுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி அக்‌ஷர் படேல் மற்றும் மேகா இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

அக்‌ஷர் படேல் - மேகா

அக்‌ஷர் படேல் மற்றும் மேகா இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ள நிலையில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். இவர்களது திருமண தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு முன்னதாக அக்‌ஷர் படேல் - மேகா திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Latest Videos

click me!