IRE vs IND T20: இந்தியாவின் மோசமான தோல்விக்கு 5 பெரும் காரணங்கள்! இந்த' 2 வீரர்கள் படுமோசம்!

Published : Jun 29, 2026, 07:58 AM IST

IRE vs IND T20: டி20 கிரிக்கெட்டின் உலக சாம்பியனான இந்திய அணி அயர்லாந்திடம் படுமோசமாக தொடரை இழந்தது. இந்திய அணியின் தோல்விக்கான 5 பெரும் காரணங்கள் குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

PREV
16
அயர்லாந்திடம் டி20 தொடரை இழந்த இந்திய அணி

டி20 கிரிக்கெட்டில் அசைக்க முடியாத அணியாக வலம் வந்த உலக சாம்பியன் இந்திய அணி அயர்லாந்துக்கு எதிராக படுமோசமாக விளையாடி தொடரை இழந்துள்ளது. முதல் டி20 போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி, பெல்ஃபாஸ்ட்டில் நேற்று நடந்த 2வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. பின்பு விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக முதன் முறையாக தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இந்திய அணி தொடர்ந்து 16 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று வந்த நிலையில், அயர்லாந்து அணி இப்போது செக் வைத்துள்ளது. மேலும் இந்திய அணி பல ஆண்டுகளுக்கு பிறகு டி20 தொடரை இழந்துள்ளது. இந்திய அணியின் மோசமான தோல்விக்கு 5 பெரும் காரணங்கள் உள்ளன.

26
ஆடுகளத்தை கணிக்காத இந்திய வீரர்கள்

2வது டி20 போட்டியில் முதல் இன்னிங்ஸுடன் ஒப்பிடும்போது, ​​இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் மாறியது. பந்து மெதுவாக வரத் தொடங்கியதால், பேட்ஸ்மேன்கள் தங்களது ஷாட்களை ஆடுவது கடினமாக இருந்தது. இந்திய பேட்ஸ்மேன்களால் அந்தச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள முடியவில்லை. ஐபிஎல் போட்டிகளில் பளபளக்கும் பேட்டிங்குக்கு ஏற்ற பிட்ச்களில் ஆடி இந்திய வீரர்கள் பழக்கப்பட்டதால் கொஞ்சம் கஷ்டமான இந்த பிட்ச்சில் கணித்து விளையாட முடியவில்லை என்பதே உண்மை. அதே வேளையில் அயர்லாந்து வீரர்கள் பிட்ச்சின் தன்மையை உணர்ந்து மிகச்சிறப்பாக விளையாடினார்கள்.

36
பேட்டிங் படுமோசம்

இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா, திலக் வர்மாவை தவிர, வேறு எந்த பேட்ஸ்மேனாலும் ஒரு பெரிய இன்னிங்ஸ் அடிக்க முடியவில்லை. முன்னணி வீரர்கள் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். தொடர்ச்சியான விக்கெட் இழப்புகளால் இந்தியாவால் அதிலிருந்து மீளவே முடியவில்லை. அதுவும் சஞ்சு சாம்சன், ஷ்ரேயார் ஐயர் பேட்டிங் மிகவும் படுமோசம் என்றே சொல்ல வேண்டும். அவர்கள் அவுட் ஆன விதமும் படு விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

46
இந்திய பவுலர்களும் எதிர்பார்த்த அளவில் வீசவில்லை

இந்தியாவின் பந்துவீச்சும் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக அமையவில்லை. முதல் போட்டியில் பிரசித் கிருஷ்ணா நான்கு ஓவர்களில் 57 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு ஓவரில் 19 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர். 2வது போட்டியில் அர்ஷ்தீப் சிங் அதிக ரனக்ளை வழங்கினார். சூர்யான்ஷ் ஷெட்ஜ்வும் அதிக ரன்களை வாரி வழங்கினார். அதே வேளையில் பிரின்ஸ் யாதவ் அறிமுக போட்டியில் சிறப்பாக பந்துவீனார்.

56
இந்திய அணி பீல்டிங் மோசம்

இந்த டி20 தொடர் முழுவதும் இந்திய அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. கைக்கு வந்த எளிய கேட்ச்களை கோட்டை விட்டனர். பிடிக்க வேண்டிய பந்துகளை பவுண்டரி லைனில் தவற விட்டனர். ஆனால் மறுபக்கம் அயர்லாந்தின் பீல்டிங் அட்டகாசமாக இருந்தது.

66
அயர்லாந்து அறிமுக வீரர்களின் அசத்தல்

அயர்லாந்து அணியில் அறிமுக வீரர்களாக களமிறங்கிய பாஸ்ட் பவுலர்கள் ஜெய் மூந்திரா மற்றும் மேத்யூ ஹாலார்ட் ஆகியோர் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள். அதுவும் டி20 போட்டியில் மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மாஸ் காட்டிய ஜெய் மூந்திரா ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வென்றார். இந்திய வம்சாவாளியான இவரது சொந்த மாநிலம் ராஜஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories