நியூசி தோல்வி; இந்தியா ஹேப்பி: ஆஸிக்கு எதிரான 4 போட்டியில் இந்தியா எத்தனை ஜெயிக்கணும்?

Published : Dec 03, 2024, 09:38 AM ISTUpdated : Dec 03, 2024, 09:42 AM IST

WTC Points Table : India vs Australia Test Series : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா எத்தனை போட்டிகளில் ஜெயித்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது பற்றி பார்க்கலாம்.

PREV
17
நியூசி தோல்வி; இந்தியா ஹேப்பி: ஆஸிக்கு எதிரான 4 போட்டியில் இந்தியா எத்தனை ஜெயிக்கணும்?
Border Gavaskar Trophy 2024, India vs Australia Test Cricket

WTC Points Table : India vs Australia Test Series : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்ததால், 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான ரேஸில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்தின் தோல்வியால் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கான வழி எளிதாகியுள்ளது.

27
India vs Australia Test Series, BGT 2024

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா (61.11% வெற்றி சதவீதம்) முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்கா (59.26%) 2ஆவது இடத்திலும், ஆஸ்திரேலியா (57.69%) 3ஆவது இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து மற்றும் இலங்கை முறையே 50% புள்ளிகளுடன் 4 மற்றும் 5வது இடங்களில் உள்ளன.

37
India vs Australia Test, Rohit Sharma, Australia Test Series

இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலிருந்து 2ஆவது இடத்திற்கு சரிந்தது. இதையடுத்து, பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக வெற்றி பெறவே மீண்டும் முதலிடத்திற்கு சென்றது.

47
India vs Australia Test, Test Cricket, Rohit Sharma

ஆஸி,க்கு எதிராக இன்னும் 4 டெஸ்ட் போட்டிகள் எஞ்சியிருக்கிறது. இதில், இந்தியா 2 வெற்றி, ஒரு போட்டி டிரா செய்யப்பட்டாலும் கூட இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது. தென் ஆப்பிரிக்கா 3 போட்டியில் 2ல் வெற்றி பெற வேண்டும். ஆஸ்திரேலியா 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற வேண்டும். இதில், இந்தியாவுக்கு எதிராக 4 போட்டியிலும், இலங்கைக்கு எதிராக 2 போட்டியிலும் ஆஸி பங்கேற்கிறது. இலங்கை எஞ்சிய 3 போட்டியிலும் வெற்றி பெற்றால் மட்டுமே டேஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.

57
Rohit Sharma, Border Gavaskar Trophy

பிங்க் பந்து போட்டியில் இந்தியா வெற்றி

கான்பெராவில் நடைபெற்ற பிரதம மந்திரி XI அணிக்கு எதிரான பிங்க் பந்து பயிற்சிப் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையே 2 நாள் போட்டி திட்டமிடப்பட்டது. சனிக்கிழமை மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையும் மழை குறுக்கிட்டதால், தலா 46 ஓவர்கள் கொண்ட போட்டி நடத்தப்பட்டது.

67
WTC Points Table, World Test Championship (2023-2025) Points table

முதலில் பேட் செய்த பிரதம மந்திரி XI அணி 43.2 ஓவர்களில் 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சாம் கான்ஸ்டஸ் 107 ரன்கள் எடுத்தார். ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளும், ஆகாஷ்தீப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இலக்கைத் துரத்திய இந்தியா, 46 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் 50 ரன்கள் எடுத்து தனது ஃபிட்னெஸை நிரூபித்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45, நிதிஷ் ரெட்டி 42, வாஷிங்டன் சுந்தர் 42, கே.எல்.ராகுல் 27, ரவீந்திர ஜடேஜா ரன்கள் எடுத்தனர்.

77
World Test Championship Points Table

இந்தியா வெற்றி எப்படி?

போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏனெனில், இந்தியா 42.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. ஆனால், பயிற்சிப் போட்டி என்பதால், இந்தியா முழு 46 ஓவர்களையும் பேட் செய்து 5 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டும்போது 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்திருந்ததால், இந்தியாவுக்கு 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி என்று அறிவிக்கப்பட்டது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories