
India vs Australia 2nd Test Virat Kohli Adelaide Records : இந்தியா vs ஆஸ்திரேலியா - விராட் கோலி: பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா இந்த தொடரை அற்புதமாகத் தொடங்கியது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சியூட்டும் தோல்வியைத் தந்தது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்றது.
பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவே. இப்போது இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட தொடரின் 2ஆவது போட்டி டிசம்பர் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அடிலெய்டு ஓவலில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா பிங்க் நிற பந்தில் விளையாடுகிறது.
அடிலெய்டில் கோலியின் ரன் மழை:
அடிலெய்டு டெஸ்டில் அனைவரின் பார்வையும் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன், முன்னாள் கேப்டன் விராட் கோலியின் மீதுதான் உள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கோலிக்கு அற்புதமான சாதனைப் பட்டியல் உள்ளது.
கிங் கோலி மீண்டும் ஒருமுறை ஆஸ்திரேலிய மண்ணில் தனது பேட்டிங்கால் அசத்த விரும்புகிறார். கோலி பெர்த் டெஸ்டில் சதம் (100*) அடித்து ஃபார்முக்குத் திரும்பினார். இதனால் அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் மேலும் உற்சாகத்துடன் கோலி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்கு கோலிக்கு அற்புதமான பேட்டிங் சாதனைகள் உள்ளன.
மீண்டும் ஒருமுறை அசத்த விரும்பும் கிங் கோலி
விராட் கோலி அடிலெய்டு மைதானத்தில் மொத்தம் 11 போட்டிகள் (4 டெஸ்டுகள், 4 ஒருநாள், 3 டி20) விளையாடியுள்ளார், இதில் மூன்று வடிவங்களையும் சேர்த்து 73.61 சராசரியுடன் 957 ரன்கள் எடுத்துள்ளார். அடிலெய்டு ஓவலில் கோலி ஐந்து சதங்கள் அடித்துள்ளார். இதில் டெஸ்டுகளில் மூன்று சதங்களும், ஒருநாள் போட்டிகளில் இரண்டு சதங்களும் அடங்கும்.
டிசம்பர் 2014இல் கோலி இதே மைதானத்தில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் (115, 141) அடித்தார். கேப்டனாக கோலிக்கு அதுவே முதல் டெஸ்ட் போட்டி, இதில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தோல்வியடைந்தாலும் அந்தப் போட்டியில் கோலி தனது பேட்டிங்கால் மீண்டும் ஒருமுறை அசத்தினார்.
ஆஸ்திரேலியா என்றாலே கோலிக்கு குஷி தான்:
அடிலெய்டில் மட்டுமல்ல... ஆஸ்திரேலியாவின் கிட்டத்தட்ட ஒவ்வொரு மைதானத்திலும் விராட் கோலியின் பேட் அற்புதமாக ரன்களைச் சேர்க்கிறது. ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை கோலி மொத்தம் 14 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ளார்.
அதில் 56.03 சராசரியுடன் 1457 ரன்கள் எடுத்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் கோலி 7 சதங்களும், 4 அரைசதங்களும் அடித்துள்ளார். டிசம்பர் 2014இல் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) கோலி அடித்த 169 ரன்கள் ஆஸ்திரேலியாவில் அவரது சிறந்த டெஸ்ட் ஸ்கோராகும்.
2014-15 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கோலியின் சாதனை பட்டியல்:
2011-12, 2014-15 காலகட்டங்களில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்களில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலி. டெஸ்ட் தொடரில் கோலியின் சிறந்த ஆட்டம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவே உள்ளது. 2014-15 சுற்றுப்பயணத்தில் கோலி நான்கு டெஸ்ட் போட்டிகளில் 86.50 சராசரியுடன் 692 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு சதங்களும், ஒரு அரைசதமும் அடங்கும். ஆஸ்திரேலியாவில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.
அடிலெய்டில் மீண்டும் ஒருமுறை:
அடிலெய்டில் அற்புதமான புள்ளிவிவரங்களைக் கொண்ட விராட் கோலி மீண்டும் ஒருமுறை தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்த விரும்புகிறார்.
அடிலெய்டு ஓவலில் கோலி படைத்த டெஸ்ட் சாதனைகள்
மொத்த போட்டிகள்: 4
ரன்கள்: 509
சராசரி: 63.62
சதங்கள்: 3
அரைசதங்கள்: 1
சிக்ஸர்கள்: 2
பவுண்டரிகள்: 53
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி படைத்த டெஸ்ட் சாதனைகள்
மொத்த போட்டிகள்: 26
ரன்கள்: 2147
சராசரி: 48.79
சதங்கள்: 9
அரைசதங்கள்: 5
சிக்ஸர்கள்: 7
பவுண்டரிகள்: 235