
India vs Sri Lanka 2 Times Toss in ODI World Cup 2011 Final : ஒரே போட்டியில் 2 முறை டாஸ் போடப்பட்ட நிகழ்வு இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் நடைபெற்றுள்ளது. 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையை இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தியது. இந்த தொடருக்கு இந்திய அணிக்கு கூல் கேப்டன் எம்.எஸ்.தோனி தான் கேப்டனாக இருந்தார். இதே போன்று இலங்கை அணிக்கு குமார் சங்கக்காரா கேப்டனாக இருந்தார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தான் 2 முறை டாஸ் போடப்பட்டுள்ளது. இதற்கு நடுவர்கள் தான் காரணமாக சொல்லப்படுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பியிருந்தனர். தோனி மற்றும் சங்ககரா போட்டி போடுவதற்கு ரெடியாக இருந்தனர். போட்டி நடுவராக ஜெஃப் குரோவ் இருந்தார். அவர்களுடன் அப்போது டாஸ் தொகுப்பாளர் ரவி சாஸ்திரியும் இருந்தார்.
முதலில் தோனி தான் டாஸ் காயினை சுண்டி விட்டார். குமார் சங்கக்கார டாஸ் கேட்டார். டாஸ் விழவே இருவருமே டாஸ் வென்றதாக நினைத்துக் கொண்டனர். ஆனால் நடுவர் ஜெஃப் குரோவ், சங்கக்காரா டாஸ் கேட்டது கேட்கவில்லை என்று கூறினார். பின்னர் இருவரது சம்மதத்துடன் 2ஆவது முறையாக டாஸ் போடப்பட்டது. தோனி தான் டாஸ் போட்டார். குமார் சங்கக்காரா டாஸ் கேட்கவே கடைசியில் அவர் தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
முதலில் தோனி தான் டாஸ் காயினை சுண்டி விட்டார். குமார் சங்கக்கார டாஸ் கேட்டார். டாஸ் விழவே இருவருமே டாஸ் வென்றதாக நினைத்துக் கொண்டனர். ஆனால் நடுவர் ஜெஃப் குரோவ், சங்கக்காரா டாஸ் கேட்டது கேட்கவில்லை என்று கூறினார். பின்னர் இருவரது சம்மதத்துடன் 2ஆவது முறையாக டாஸ் போடப்பட்டது. தோனி தான் டாஸ் போட்டார். குமார் சங்கக்காரா டாஸ் கேட்கவே கடைசியில் அவர் தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
சேவாக் 0, சச்சின் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க கவுதம் காம்பீர் மற்றும் எம்.எஸ்.தோனி இருவரும் நிதானமாக ஆரம்பித்து கடைசியில் அதிரடியாக விளையாடினர். காம்பீர் 97 ரன்களுக்கு ஆட்டமிழக்க யுவராஜ் சிங் இணைந்தார். கடைசியில் தோனி வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். அவர் சிக்ஸர் அடித்து பந்து விழுந்த இடத்தை மும்பை வான்கடே மைதானம் நினைவு இடமாக மாற்றியுள்ளது.
இறுதியாக 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தான் ரவிச்சந்திரன் அஸ்வின் உடன் நடைபெற்ற உரையாடலின் போது, அஸ்வின் அந்த சம்பவம் பற்றி கேட்டார்.
அதற்கு பதிலளித்த சங்கக்காரா ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால், இலங்கையில் அப்படி இருக்காது. நான் டாஸ் கேட்டது எனக்கு நன்றாக நினைவு இருக்கு. அப்போது மஹி உறுதியாக தெரியவில்லை, நீங்கள் கேட்டது டெயிலா என்றார். நான் இல்லை இல்லை ஹெட் என்று கூறினேன்.
இதனால் சிறிது குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் டாஸ் போடப்பட்டது. அப்போது நான் டாஸ் ஜெயிச்சது அதிர்ஷ்டமா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. நான் டாஸ் தோற்று இருந்தால் இந்தியா தான் பேட்டிங் செய்திருக்கும் என்று கூறினார்.
1996 ஆம் ஆண்டு இலங்கை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது. 2011ல் ஒரு வாய்ப்பு கிடைத்தது. 2007ல் ஒரு வாய்ப்பு., 2009 மற்றும் 2012ல் டி20 வாய்ப்புகள் கிடைத்தது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.