திலக் வர்மாவும் 42 பந்துகளில் 10 பவுண்டரி, 1 சிக்சருடன் 73 ரன்கள் அடித்தார். பின்பு இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க வீரர் குயின்டன் டி காக் அர்ஷ்தீப் சிங் ஓவரில் பவுண்டரிகளாக ஓட விட்டார்.
ஆனால் மறுபக்கம் தடுமாறிய ரீசா ஹென்ட்ரிக்ஸ் 13 ரன்னில் வருண் சக்கரவர்த்தி பந்தில் காலியானார். தொடர்ந்து சூப்பராக விளையாடிய குயின்டன் டி காக் 30 பந்துகளில் அரை சதம் அடிக்க, அவருடன் ஜோடி சேர்ந்த டேவால்ட் பிராவிஸ்ஸூம் அதிரடியில் வெளுத்துக் கட்டினார்.
ஜஸ்பிரித் பும்ரா சூப்பர் பவுலிங்
இந்த ஜோடிக்கு முடிவு கட்டிய ஜஸ்பிரித் பும்ரா தனது சூப்பர் பவுலிங்கால் குயின்டன் டி காக்கை (35 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 65 ரன்) இதன்பிறகு டேவால்ட் பிராவிஸ்ஸூம் (17 பந்தில் 31 ரன்) பாண்ட்யா பந்தில் கேட்ச் ஆக தென்னாப்பிரிக்கா அணி தடம்புரண்டது.
பின்பு கேப்டன் மார்க்ரம் (6), பெரேராவை (0) வருண் சக்கரவர்த்தி ஒரே ஓவரில் தூக்கினார். டேவிட் மில்லரும் (18) தாக்குப்பிடிக்கவில்லை. தொடந்து ஜார்ஜ் லிண்டேவும் (16) வருணின் சுழலில் வீழ்ந்தார்.