Published : Sep 22, 2025, 12:08 AM ISTUpdated : Sep 22, 2025, 12:27 AM IST
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா அதிரடி அரை சதம் அடித்து அசத்தினார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது. அதிரடி அரை சதம் விளாசிய அபிஷேக் சர்மா வெறும் 39 பந்தில் 74 ரன் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 171 ரன்கள் எடுத்தது.
27
இந்திய அணி பீல்டிங் சொதப்பல்
பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் 45 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 58 ரன் அடித்தார். இந்திய அணி தரப்பில் ஷிவம் துபே 2 விக்கெட்டும், குல்தீப், வருண் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
இந்திய அணியின் பீல்டிங் மோசமாக இருந்தது. மொத்தம் 4 கேட்சகளை (அபிஷேசர் சர்மா 2 கேட்ச் டிராப், குல்தீப், சுப்மன் கில் தலா 1 கேட்ச் டிராப்) தவற விட்டனர். இதேபோல் பும்ராவும் மோசமாக பவுலிங் செய்து 4 ஓவரில் 45 ரன்களை வாரி வழங்கினார். இதனைத் தொடர்ந்து சவாலான இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்தது.
37
அபிஷேக் சர்மா, சுப்மன் கில் காட்டடி
தொடக்க வீரர்களாக களமிறங்கிய இளம் வீரர்கள் அபிஷேக் சர்மா, சுப்மன் கில் பாகிஸ்தான் பவுலர்களை பந்துவீச்சை வெளுத்துக் கட்டினார்கள். அபிஷேக் சர்மா வழக்கம்போல் சிக்சர் மழை பொழிய, சுப்மன் கில் தனது டிரேட் மார்க் ஷாட்கள் மூலம் பவுண்டரிகளை ஓட விட்டார். ஷாஹீன் ஷா அஃப்ரிடி, சைம் அயூப், அப்ரார் அகமது என பாகிஸ்தான் முன்னணி வீரர்களின் பந்துகளை கொஞ்சம் கருணை காட்டாமல் இருவரும் தவிடு பொடியாக்கினார்கள்.
தொடர்ந்து பட்டாசு போல் வெடித்து சிதறிய அபிஷேக் சர்மா வெறும் 24 பந்துகளில் அரை சதம் விளாசி அசத்தினார். இந்திய அணி வெறும் 9 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. பாஸ்ட் பவுலர்கள், ஸ்பின்னர்கள் என அனைவரையும் பயன்படுத்தி பார்த்தும் இருவரையும் அவுட்டாக்க முடியவில்லை. இருவரின் அதிரடியை கண்டு பாகிஸ்தான் வீரர்கள் மிரண்டு போயினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சுப்மன் கில்லும் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
57
அடுத்தடுத்து 3 விக்கெட் இழந்த இந்தியா
நன்றாக விளையாடிய அவர் 28 பந்தில் 8 பவுண்டரியுடன் 47 ரன்னில் ஃபஹீம் அஷ்ரஃப் பந்தில் போல்டானார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 10 ஓவரில் 105/1 என்ற நிலையில் இருந்தது. இதன்பிறகு உள்ளே வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும் ஹாரிஸ் ரவூஃப் பந்தில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு டக் அவுட் ஆனார். ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் அபிஷேக் சர்மா தனது அதிரடி சரவெடியை தொடர்ந்தார். சூப்பராக விளையாடிய அவர் வெறும் 39 பந்தில் 6 பவுண்டரி, 5 சிக்சருடன் 74 ரன் விளாசி அப்ரார் அகமது பந்தில் கேட்ச் ஆனார்.
67
இந்திய அணி அபார வெற்றி
அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 12.2 ஓவரில் 121/3 என்ற நிலையில் இருந்தது. இதன் பின்னர் களமிறங்கிய சஞ்சு சாம்சன் (17 பந்தில் 13 ரன்) தடுமாறத்துடன் ஆடி ஹாரிஸ் ரவூஃப் வேகத்தில் போல்டானார். இறுதியில் பாகிஸ்தான் வீரர்கள் ஸ்லோ பந்துகளை போட்டதால் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க சிரமப்பட்டனர்.
ஆனால் திலக் வர்மா சூப்பராக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்திய அணி 18.5 ஓவரில் 4 விக்கெட் மட்டுமே இழந்து174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திலக் வர்மா 19 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 30 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
77
ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா
அதிரடி அரை சதம் அடித்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருது வென்றார். ஏற்கெனவே லீக் சுற்றில் பாகிஸ்தானை பந்தாடி இருந்த இந்திய அணி இப்போது 2வது முறையாக அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த தோல்வி மூலம் பாகிஸ்தான் நெருக்கடியில் சிக்கியுள்ளது. அந்த அணி இலங்கை மற்றும் வங்கதேசத்தை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.