IND vs PAK: இன்னைக்கு மேட்சில் 'அவர்' தான் நடுவர்! என்ன பண்ணுவீங்க! பாகிஸ்தானிடம் அடித்து ஆடும் ஐசிசி!

Published : Sep 21, 2025, 02:55 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றில் இன்றைய இந்தியா, பாகிஸ்தான் போட்டியில் சர்ச்சைக்குரிய நடுவர் ஆன்டி பைக்ராஃப்ட்டை போட்டி நடுவராக ஐசிசி நியமித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பாகிஸ்தான் அணியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

PREV
14
Asia Cup 2025: India vs Pakistan Super 4 Clash

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று நடந்து வருகிறது. இதில் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று மோதுகின்றன. ஏற்கெனவே நடந்த லீக் சுற்றில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்திய நிலையில், இந்த தொடரில் 2வது முறையாக இரு அணிகளும் மோதுகின்றன. இந்த போட்டியில் சர்ச்சைக்குரிய நடுவர் ஆன்டி பைக்ராஃப்ட்டை(Andy Pycroft) நடுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

24
பாகிஸ்தானுடன் கைலுக்காத இந்திய வீரர்கள்

லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதியபோது கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் யாரும் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்கவில்லை. இந்த போட்டியின்போது இந்திய அணியுடன் கைகுலுக்க வேண்டாம் என நடுவர் ஆன்டி பைக்ராஃப்ட் பாகிஸ்தான் கேப்டனிடம் கூறியதாகவும் இதனால் ஆன்டி பைக்ராஃப்ட்டை நீக்கும் வரை ஆசிய கோப்பையில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்தது.

ஆன்டி பைக்ராஃப்ட்டை நீக்க மறுத்த ஐசிசி

இதனால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அணி நாடகம் ஆடியது. ஆனால் ஆன்டி பைக்ராஃப்ட்டை நீக்க ஐசிசி மறுத்து விட்டது. 

இதனைத் தொடர்ந்து ஆன்டி பைக்ராஃப்ட் பாகிஸ்தான் கேப்டனிடனும், பாகிஸ்தான் மேனேஜரிடமும் மன்னிப்பு கேட்டதால், தாமதமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக விளையாட பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்தது.

34
ஆன்டி பைக்ராஃப்ட் மன்னிப்பு கேட்டாரா?

ஆனால் இதை மறுத்த ஐசிசி, நடுவர் ஆன்டி பைக்ராஃப்ட் பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்று தெரிவித்தது. டாஸ் சமயத்தில் ஏற்பட்ட தவறான புரிதல் மற்றும் தகவல் தொடர்பு சிக்கலைத் தீர்ப்பதற்காகவே ஆன்டி பைக்ராஃப்ட் பாகிஸ்தான் அணியைச் சந்தித்தார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியது.

44
இன்றைய போட்டியில் ஆன்டி பைக்ராஃப்ட் நடுவர்

இந்த நிலையில் தான் இன்றைய இந்தியா, பாகிஸ்தான் போட்டியிலும் மேட்ச் ரெப்ரியாக ஆன்டி பைக்ராஃப்ட்ட ஐசிசி நியமித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதானல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது. 

ஆகையால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக செய்தது போல் பாகிஸ்தான் புறக்கணிப்பு நாடகம் நடத்தப் போகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதே போல் கடந்த போட்டியை போல் இன்றைய போட்டியிலும் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க மாட்டார்கள் என கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories