Asia Cup 2025: India vs Pakistan: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன. இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பார்க்கலாம்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றின் மூன்று போட்டிகளிலும் வென்று, இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. சூப்பர் 4 சுற்றின் தனது முதல் போட்டியில் இந்திய அணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா விளையாடும் சூப்பர் 4 சுற்றின் மூன்று போட்டிகளும் நடைபெறுகின்றன.
25
இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?
இந்தியா 24ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிராகவும், 26ஆம் தேதி கடைசிப் போட்டியில் இலங்கைக்கும் எதிராகவும் விளையாடும். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்படும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். போட்டி துபாயில் நடப்பதால், அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. ஒரு வேகப்பந்து வீச்சாளர் களமிறங்குவார்.
35
சஞ்சு சாம்சனுக்கு எந்த இடம்?
தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா தொடருவார்கள். ஓமனுக்கு எதிரான லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் மூன்றாவது இடத்தில் விளையாடினார். சூர்யகுமார் யாதவ் தனது இடத்தை விட்டுக் கொடுத்தார். அனைவருக்கும் பேட்டிங்கில் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கும் நோக்கில்தான் சூர்யகுமார் ஓமனுக்கு எதிராக மூன்றாவது இடத்தை விட்டுக் கொடுத்தார். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக அப்படி நடக்க வாய்ப்பில்லை. தொடக்கத்தில் விக்கெட் விழுந்தால் மட்டுமே சஞ்சு சாம்சன் மூன்றாவது இடத்தில் விளையாட வாய்ப்புள்ளது.
நான்காவது இடத்தில் சூர்யகுமாரைத் தொடர்ந்து திலக் வர்மா களமிறங்குவார். பின்னர் சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல் களம் காண்பார்கள். வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்புவார். ஓமனுக்கு எதிராக விளையாடிய அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோர் நீக்கப்படுவார்கள்.
மீண்டும் வரும் வருண் சக்கரவர்த்தி
பும்ராவுடன் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியும் அணிக்குத் திரும்புவார். வருணுடன் சேர்த்து அக்சர் படேல், குல்தீப் யாதவ் என 3 ஸ்பின்னர்களுடனும், பும்ரா என ஒரு பாஸ்ட் பவுலர் என்ற கலவையுடன் இந்திய அணியின் பிளேயிங் லெவன் இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.
55
இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்
ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டிக்கான இந்தியாவின் உத்தேச பிளேயிங் லெவன்: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஷிவம் துபே, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி.