ஆசிய கோப்பை: பாகிஸ்தானை பந்தாடி இந்தியா சாம்பியன்..! ருத்ரதாண்டவ‌மாடிய திலக் வர்மா!

Published : Sep 29, 2025, 12:01 AM ISTUpdated : Sep 29, 2025, 12:32 AM IST

Asia Cup 2025: ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தட்டித் தூக்கியது. திலக் வர்மா அதிரடி அரை சதம் விளாசி அணியை சாம்பியன் பட்டம் வெல்ல வைத்தார்.

PREV
15
India Beat Pakistan Asia Cup 2025 Final

ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் வெறும் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் 38 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 57 ரன் எடுத்தார். ஃபக்கர் ஜமான் 25 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 46 ரன் எடுத்தார். 

பின்பு விளையாடிய இந்திய அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழந்து 150 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

25
ஆசிய கோப்பையில் இந்தியா சாம்பியன்

மேட்ச் வின்னிங் அரை சதம் விளாசிய திலக் வர்மா 53 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 69 ரன்கள் எடுத்து  எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்த ஷிவம் துபே 22 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 33 ரன்கள் அடித்து அவுட் ஆனார். ஓரளவு சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 24  ரன் எடுத்தார். ஆசிய கோப்பையில் இது இந்தியா வெல்லும் 9வது பட்டமாகும். இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

35
தொடக்கத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்

முன்னதாக, எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி மன்னன் அபிஷேக் சர்மா ஃபஹீம் அஷ்ரஃப் பந்தில் கேட்ச்சாகி ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும் (1) ஷகீன் ஷா பந்தில் காலியானார். துணை கேப்டன் சுப்மன் கில்லும் (12) ஃபஹீம் அஷ்ரஃப் பந்தில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 20/3 என பரிதவித்தது.

45
காப்பாற்றிய சஞ்சு, திலக் வர்மா ஜோடி

பின்பு ஜோடி சேர்ந்த திலக் வர்மாவும், சஞ்சு சாம்சனும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். சஞ்சு பொறுமையாக விளையாடிய திலக் வர்மா ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியடித்தார். இருவரும் ஜோடியாக 50 ரன்களுக்கு மேல் சேர்த்த நிலையில், சஞ்சு 24 ரன்களில் அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 77/ 4 என்ற நிலையில் இருந்தது. ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் திலக் தனது அதிரடியை தொடர்ந்து அரை சதம் விளாசினார்.

55
ஆட்டநாயகன் திலக் வர்மா

அவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்த சிக்சர் மன்னன் ஷிவம் துபே 33 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்படது. முதல் பந்தில் இரண்டு ரன்கள் அடித்த திலக் வர்மா, 2வது பந்தை சிக்சருக்கு பறக்க விட்டார். 3வது பந்தில் 1 ரன் எடுத்தார்.

 இதனால் ஸ்கோர் சமன் ஆன நிலையில், 4வது பந்தை ரிங்கு சிங் பவுண்டரிக்கு விரட்டி அணியை சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். இந்திய அணி 2 பந்துகள் மீதம் வைத்து த்ரில் வெற்றி பெற்றது. மேட்ச் வின்னர் திலக் வர்மா ஆட்டநாயகன் விருது வென்றார்.

Read more Photos on
click me!

Recommended Stories