#AUSvsIND முதல் டி20: ஆஸ்திரேலியாவை பொட்டளம் கட்டிய நடராஜன், சாஹல்..! இந்தியா அபார வெற்றி

First Published Dec 4, 2020, 5:37 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையே கான்பெராவில் நடந்துவரும் முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, கேஎல் ராகுலின் அரைசதம்(51) மற்றும் ஜடேஜாவின் கடைசி நேர அதிரடி(23 பந்தில் 44 ரன்கள்) பேட்டிங்கால் 20 ஓவரில் 161 ரன்கள் அடித்தது.
undefined
மிட்செல் ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரில் பேட்டிங் ஆடும்போது ஜடேஜாவின் ஹெல்மெட்டில் பந்து அடித்ததால், ஐசிசி விதிப்படி, கன்கஷன் மாற்று வீரராக சாஹல் 2வது இன்னிங்ஸில் களமிறங்கினார்.
undefined
162 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் ஃபின்ச்சும் ஷார்ட்டும் இறங்கினர். ஃபின்ச்சை 35 ரன்களில், ஜடேஜாவின் மாற்று வீரராக களமிறங்கிய சாஹல் வீழ்த்தினார். அதன்பின்னர் களத்திற்கு வந்த, ஒருநாள் கிரிக்கெட்டில் 2 சதங்களை விளாசி மிரட்டிய ஸ்மித்தையும் 12 ரன்களில் வீழ்த்தினார் சாஹல்.
undefined
4ம் வரிசை வீரராக ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னனும், ஒருநாள் கிரிக்கெட்டில் காட்டடி அடித்தவருமான மேக்ஸ்வெல் களத்திற்கு வந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு அவர் செய்ய வேண்டிய பணியை செய்யவிடாமல் நடராஜன் வெறும் 2 ரன்களுக்கு வெளியேற்றினார். மேக்ஸ்வெல்லுக்கு அடுத்து, களத்தில் நிலைத்து நின்று ஆடிய தொடக்க வீரர் ஷார்ட்டையும்(34) நடராஜன் வீழ்த்த, மேத்யூ வேடை சாஹல் வீழ்த்தினார்.
undefined
20 பந்தில் 30 ரன்கள் அடித்த மோய்ஸஸ் ஹென்ரிக்ஸை 18வது ஓவரில் தீபக் சாஹர் வீழ்த்த, பேட்ஸ்மேன்கள் அனைவரின் விக்கெட்டையும் சீரான இடைவெளியில் இழந்ததால், ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றிக்கு தேவைப்படும் ரன்ரேட் விகிதம் அதிகரித்துக்கொண்டே வந்தது. கடைசி 2 ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரை வீசிய நடராஜன், மிட்செல் ஸ்டார்க்கின் விக்கெட்டை வீழ்த்தியதுடன், 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஷமி வீசிய கடைசி ஓவரில் 15 ரன்கள் அடித்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 150 ரன்கள் அடித்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
undefined
இதையடுத்து 1-0 என டி20 தொடரில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
undefined
click me!