#AUSvsIND ராகுலின் அரைசதம், ஜடேஜாவின் கடைசிநேர அதிரடியால் தப்பிப்பிழைத்த இந்திய அணி

First Published Dec 4, 2020, 3:38 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜாவை தவிர மற்ற அனைவருமே சொதப்பியதால், 20  ஓவரில் இந்திய அணி 161 ரன்கள் மட்டுமே அடித்தது.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கான்பெராவில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.40 மணிக்கு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
undefined
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும் கேஎல் ராகுலும் களமிறங்கினர். முதல் 2 ஓவர்களை தட்டுத்தடுமாறி தாக்குப்பிடித்த தவான், மிட்செல் ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் ஆட்டமிழந்தார். வெறும் ஒரு ரன்னில் தவான் அவுட்டானார். தனது மிரட்டலான வேகத்தின் மூலம் தவானின் ஆஃப் ஸ்டம்ப்பை பிடுங்கி எறிந்து ஒரு ரன்னில் வெளியேற்றினார் ஸ்டார்க்.
undefined
இதையடுத்து களத்திற்கு வந்த கேப்டன் கோலியை 9 ரன்களுக்கு மிட்ச் ஸ்வெப்சன் வீழ்த்த, 7வது ஓவரில் 48 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி. 4ம் வரிசை வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சனை 23 ரன்களுக்கு ஹென்ரிக்ஸ் வீழ்த்தினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த ராகுல், 40 பந்தில் 51 ரன்களில் ஆட்டமிழக்க, மனீஷ் பாண்டே 2 ரன்களுக்கும் ஹர்திக் பாண்டியா பதினாறு ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினர்.
undefined
ஐபிஎல்லில் இருந்தே செம ஃபார்மில் சிறப்பாக ஆடிவரும் ஜடேஜா, இந்திய அணியின் ஃபினிஷராக உருவெடுத்துவருகிறார். இந்த போட்டியிலும் டெத் ஓவர்களில் அடித்து ஆடி ஸ்கோர் செய்தார். 29 பந்தில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 44 ரன்கள் அடித்தார். ஜடேஜாவின் கடைசி நேர அதிரடியால் இந்திய அணி 20 ஓவரில் 161 ரன்கள் அடித்துள்ளது.
undefined
click me!