கோலி 5 ரன்னு, டீம் இந்தியாவின் சோலி முடிஞ்சு – 150 ரன்னுக்கு ஆட்டம் குளோஸ்!

First Published | Nov 22, 2024, 1:54 PM IST

India vs Australia 1st Test in Perth : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 150 ரன்னுக்கு சுருண்டது. கோலி 5 ரன்னுக்கு நடையை கட்டினார்.

Border Gavaskar Trophy 2024, BGT 2024, Australia vs India 1st Test

India vs Australia 1st Test in Perth : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான முக்கிய தொடரான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் இன்று தொடங்கியது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இதில், ரோகித் சர்மா இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

IND vs AUS 1st Test Live Score, Virat Kohli, Jasprit Bumrah

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா பேட்டிங் தேர்வு செய்தார். இதில் ஹர்ஷித் ராணா, கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரெல், நிதிஷ் ரெட்டி ஆகியோர் இடம் பெற்றனர். நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்த இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. கே எல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 0 ரன்னுக்கு நடையை கட்டவே, அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 23 பந்துகள் நின்று ஒரு ரன்னு கூட அடிக்காமல் ஆட்டமிழந்தார்.

Tap to resize

India vs Australia, IND vs AUS Test Cricket

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி இந்த போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எல்லோரது பார்வையும் அவர் மீது தான் இருந்தது. ஏற்கனவே நியூசிக்கு எதிரான டெஸ் போட்டியில் மொத்தமாக 93 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடந்த 5 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே சதம் அடித்திருக்கிறார். ஆனால் ஆஸிக்கு எதிரான இந்தப் போட்டியில் 5 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

Border Gavaskar Trophy 2024, BGT 2024, Australia vs India 1st Test

ஏற்கனவே முதல் வீரராக ஆஸி வந்து பயிற்சி மேற்கொண்டு வந்த கோலி இப்போ ஆஸி வீரர்களின் விமர்சனங்களுக்கு தானாகவே சிக்கியுள்ளார். ரோகித் சர்மாவுக்கு பதிலாக இந்தப் போட்டியில் இடம் பெற்ற கேஎல் ராகுல் நிதானமாக விளையாடிய போதிலும் 23 ரன்னுக்கு நடையை கட்டினார். துருவ் ஜூரெல் 11, வாஷிங்டன் சுந்தர் 4 என்று சொற்ப ரன்களில் வெளியேற ரிஷப் பண்ட் மட்டுமே நிதானமாக விளையாடி வந்த நிலையில் அவரும் 37 ரன்னுக்கு நடையை கட்டினார்.

Rahul DRS Out, KL Rahul, Mitchell Starc, Josh Hazlewood, Mitchell Marsh

கடைசியில் ஹர்ஷித் ராணா 7, ஜஸ்ப்ரித் பும்ரா 8 ரன்னுக்கு நடையை கட்டவே இந்த டெஸ்டில் அறிமுகமான நிதிஷ் ரெட்டி அதிரடியாக விளையாடி 59 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் மட்டும் 41 ரன்கள் எடுக்கவில்லை என்றால் இந்தியா 109 ரன்னுக்கு ஆட்டமிழந்திருக்கும்.

இந்தப் போட்டியில் இந்தியா 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானதன் மூலமாக அவே போட்டியில் 9ஆவது முறையாக முதல் நாளிலேயே இந்திய அணி ஆல் அவுட்டான சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக முதல் முறையாக 2011 ஆம் ஆண்டு கிங்ஸ்டன் போட்டியில் இந்திய அணி முதல் நாளிலேயே ஆல் அவுட்டாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

India vs Australia, IND vs AUS Test Cricket, Border Gavaskar Trophy 2024

ஆஸியை பொறுத்த வரையில் பவுலிங்கில் ஜோஸ் ஹசல்வுட் 4 விக்கெடுகள் கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதையடுத்து இந்திய அணி குறைவான ஸ்கோர் எடுத்திருந்த போதிலும் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான பும்ராவின் நம்பிக்கையுடன் பவுலிங் செய்து வருகிறது. தற்போது வரை ஆஸ்திரேலியா 19 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இந்த 3 விக்கெட்டையும் பும்ராவே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!