டபுள் டமாக்கா; 2025 மட்டுமில்ல 2026, 2027 ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியீடு; செம்ம டுவிஸ்ட்!

Published : Nov 22, 2024, 12:43 PM ISTUpdated : Nov 22, 2024, 02:48 PM IST

IPL 2025 Schedule for Next 3 Year : ஐபிஎல் 2025 தொடருக்கான அட்டவணை மட்டுமின்றி 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளுக்கான அட்டவணையையும் பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது.

PREV
16
டபுள் டமாக்கா; 2025 மட்டுமில்ல 2026, 2027 ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியீடு; செம்ம டுவிஸ்ட்!
IPL Auction 2025, IPL 2025 to be played from March 14 to May 25

IPL Schedule for Next 3 Year : ஒவ்வொரு ஆண்டும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் எனப்படும் ஐபிஎல் தொடரை பிசிசிஐ நடத்தி வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 17 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. இந்த 17 சிசன்களில் முறையே மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய 2 அணிகளும் தலா 5 முறை டிராபியை வென்றுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 முறை டிராபியை கைப்பற்றியுள்ளது. இது தவிர, ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் டிராபியை வென்றுள்ளன.

26
IPL 2025 Begins March 14

ஆனால், இதில் என்ன பரிதாபம் என்றால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 17 ஆண்டுகளாக விளையாடி வரும் விராட் கோலியால் ஒரு முறை கூட டிரா அடிக்கமுடியவில்லை. இதே போன்று தான் பஞ்சாப் கிங்ஸ் அணியும். இந்த 2 அணிகள் தான் இதுவரையில் 17 சீசன்கள் விளையாடி ஒரு முறை கூட ஐபிஎல் ஜெயிக்கவில்லை. இந்த நிலையில் தான் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.

36
IPL 2025 Schedule

அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணியும் வெளியிட்டன. அதன்படி இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களான ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், இஷான் கிஷன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இந்த மூவரும் இந்த ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கின்றனர். இவர்களுடன் இணைந்து ஜோஸ் பட்லர், பில் சால்ட், குயீண்டன் டி காக் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

46
IPL 2025 Dates Confirmed and 3 Year IPL Schedule Unveiled

ஐபிஎல் 2025 ஏலம்:

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனலிலும், ஜியோ சினிமாவிலும் லைவ்வாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

56
IPL Schedule for Next 3 Year

ஐபிஎல் 2025 மொத்த வீரர்கள்

தேவையாக உள்ள 204 இடங்களுக்கு 366 இந்திய வீரர்கள் மற்றும் 208 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தமாக 574 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர். இந்த நிலையில் தான் 2025 ஆம் ஆண்டுக்கானா ஐபிஎல் தொடர் எப்போது தொடங்குகிறது என்பது மட்டுமின்றி 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது.

66
IPL 2025 from Mar 14 to May 25

ஐபிஎல் 3 ஆண்டுகள் அட்டவணை:

அதன்படி 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் 14 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில், மொத்தமாக 74 போட்டிகள் நடத்தப்படுகிறது. இதே போன்று 2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரானது மார்ச் 15 முதல் மே 31ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. 2027ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 14 முதல் மே 30 வரையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2025 – மார்ச் 14 முதல் மே 25 வரை

ஐபிஎல் 2026 – மார்ச் 15 முதல் மே 31 வரை

ஐபிஎல் 2027 – மார்ச் 14 முதல் மே 30 வரை

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories