டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 அதிரடி மாற்றங்கள் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டி20 உலகக்கோப்பை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்று பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 76 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. இந்திய அணி மீதமிருக்கும் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை நினைத்து பார்க்க முடியும்.
26
இந்தியா vs ஜிம்பாப்வே சூப்பர் 8 போட்டி
அதுவும் வெஸ்ட் இண்டீஸ் அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தினால் நிலைமை சிக்கலாகும் என்பதால் இந்திய அணி மீதமுள்ள 2 போட்டிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டியது அவசியம். இந்த முக்கியமான கட்டத்தில் இந்திய அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜிம்பாப்வே அணியை பிப்ரவரி 26ம் தேதி எதிர்கொள்ள உள்ளது. இது வாழ்வா? சாவா? போட்டி என்பதால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
36
திலக் வர்மா அதிரடி நீக்கம்
அதாவது ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் இளம் அதிரடி வீரர் திலக் வர்மா அதிரடியாக நீக்கப்படுகிறார். இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் திலக் வர்மாவால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை. அதுவும் ஸ்டிரைக் ரேட் மிகவும் கம்மியாக உள்ளது. இதனால் திலக் வர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட உள்ளார்.
இளம் அதிரடி மன்னன் அபிஷேக் சர்மா 3 போட்டிகளில் டக் அவுட் என மிக மோசமாக விளையாடி வருகிறார். இதனால் அவர் தான் நீக்கப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஜிம்பாப்வேவுக்கு எதிராக அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பேட்டிங்கில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத அதிரடி வீரர் ரிங்கு சிங் நீக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் அக்சர் படேல் மீண்டும் உள்ளே வருகிறார்.
56
கம்பேக் கொடுக்கும் குல்தீப் யாதவ்
மேலும் தமிழக அதிரடி வீரர் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு ஸ்பின்னர் குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுகிறார். ஜிம்பாப்வே அணி பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களுக்கு தடுமாறுவார்கள் என்பதால் 3 ஸ்பின்னர்களுடன் களம் காண முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஸ்ட் பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங், பும்ரா பிரதானமாக இருப்பார்கள்.
66
இந்திய அணி பிளேயிங் லெவன்
ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், அக்சர் படேல், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்கரவர்த்தி.