நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 208 ரன்கள் குவித்தது. கேப்டன் மிட்ச்செல் சாண்ட்னர் 27 பந்தில் 47 ரன்கள் விளாசினார்.
பின்பு இமாலய இலக்கை சேஸ் செய்த இந்திய அணி கிஷான் கிஷனின் புயல் வேக அரைசதம் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ்வின் மாஸ் கம்பேக் மூலம் வெறும் 15.2 ஓவரில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 209 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
23
இஷான் கிஷன் ருத்ரதாண்டவம் SKY மாஸ் கம்பேக்
நியூசிலாந்து பவுலர்களை ஓடவிட்ட இஷான் கிஷன் வெறும் 32 பந்துகளில் 11 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 76 ரன்கள் விளாசினார். ஓராண்டுக்கு பிறகு அரை சதம் அடித்து மாஸ் கம்பேக் கொடுத்துள்ள சூர்யகுமார் யாதவ் வெறும் 37 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 82 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷிவம் துபே தனது பங்குக்கு 18 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 36 ரன்கள் விளாசி நாட் அவுட் ஆக திகழந்தார்.
33
நியூசிலாந்து பீல்டிங், பவுலிங் மோசம்
நியூசிலாந்து அணியின் பவுலிங் மிக மோசமாக இருந்தது. அந்த அணியின் பவுலர் ஜாக் ஃபோல்ஸ் 3 ஓவரில் 67 ரன்களை வாரி வழங்கினார். வழக்கமாக நியூசிலாந்து அணி சிறப்பாக பீல்டிங் செய்யும் நிலையில், இந்த போட்டியில் படுமோசமாக பீல்டிங் செய்தனர். இன்றைய வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.