Ind Vs Aus
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் ஆஸ்திரேலியா பௌலர்களின் வேகத்தை தாக்குபிடிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து நடையை கட்டினர்.
Ind Vs Aus
இறுதியில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. இந்தியாவை 150 ரன்களுக்குள் சுருட்டிய மகிழ்ச்சியில் களத்திற்கு வந்த ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் கேப்டன் பும்ராவின் ஸ்விங் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் வந்த வேகத்திற்கு நடையை கட்டினர்.
Ind Vs Aus
முதல் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் சேர்த்திருந்தது. 3 விக்கெட்டுகள் கைவசம் இருந்த நிலையில் இரண்டாவது நாளை களம் கண்ட ஆஸ்திரேலியா கூடுதலாக 37 ரன்கள் சேர்த்த நிலையில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதியில் அந்த அணி 104 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது.
Ind Vs Aus
ஆஸ்திரேலியா சார்பில் மிட்சல் ஸ்டார்க் 26, அலெக்ஸ் ஹேரி 21 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் கேப்டன் பும்ரா 5 விக்கெட்டுகளும், ஹர்ஷிட் ராணா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி உள்ளனர். ஆஸ்திரேலியாவை விட 46 ரன்கள் முன்னிலையில் உள்ள இந்தியா தனது இரண்டாவது இன்னிங்கைத் தொடங்க உள்ளது.