எனக்கு சண்டன்னா பயம்; மேட்சுல வாக்குவாதம் செய்வது கூட அம்பயர் இருப்பார்ல, அந்த தைரியம் தான் - விராட் கோலி!

First Published | Apr 25, 2023, 11:18 AM IST

தனக்கு உடல் ரீதியிலான சண்டை என்றாலே ரொம்பவே பயம் என்றும், மேட்சில் வாக்குவாதம் செய்யும் போது கூட நடுவர் வந்து சமாதான் செய்வார் என்ற தைரியம் தான் என்று விராட் கோலி கூறியுள்ளார்.

I am afraid of fight said Virat Kohli
விராட் கோலி

கடந்த 15 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து வரும் விராட் கோலி 25 ஆயிரம் ரன்களையும் கடந்து 75 சதங்கள் வரை விளாசியுள்ளார்.

விராட் கோலி

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனையை படைக்கச் செய்தார். ஆஸ்திரேலியா மட்டுமின்றி இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா நாடுகளிலும் பல்வேறு சாதனைகளை விராட் கோலி நிகழ்த்தியூள்ளார்.


விராட் கோலி

அதே போன்று ஐபிஎல் தொடரிலும் அதிக ரன்கள் குவித்த வீரராக விராட் கோலி சாதனை படைத்து வருகிறார். ரன் மெஷின், கிங் கோலி என்றெல்லாம் விராட் கோலி அழைக்கப்படுவார்.

விராட் கோலி

ஆனால், அதையும் மீறி மைதானத்தில் ஆக்ரோஷமாக காணப்படுவார். அதோடு, தனது முக பாவனைகள் மூலமாக எதிரணி வீரர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவார். சில நேரம் ஜாலியாக இருந்தால் டான்ஸூம் ஆடுவார்.

விராட் கோலி

இவ்வளவு ஏன், சென்னைக்கு எதிரான போட்டியில் ஷிவம் துபேவின் விக்கெட்டை கைப்பற்றிய பிறகு விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதற்கு சம்பளத்தில் 10 சதவிகிதத்தை அபராதமாக கட்டினார். இப்படியெல்லாம் செய்யும் தனக்கு உடல் ரீதியிலான சண்டை என்றால் ரொம்பவே பயம் என்று விராட் கோலி கூறியுள்ளார். 

விராட் கோலி

இது குறித்து தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: இளம் வயதில் எல்லாம் நண்பர்களுடன் அது போன்று சண்டை போட்டதில்லை. இதுவே மைதானம் என்றால் வாக்கு வாதத்தில் ஈடுபடுவது கூட நடுவர் வந்து சமாதானம் செய்துவிடுவார் என்ற தைரியத்தில் தான் என்று அவர் கூறியுள்ளார்.

Latest Videos

click me!