6 போட்டிக்குப் பிறகு இப்படியொரு சாதனையை படைத்த டேவிட் வார்னர்; ரசிகர்கள் கொண்டாட்டம்!

Published : Apr 25, 2023, 10:26 AM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் சிக்ஸர் அடித்து இந்த ஆண்டுக்கான முதல் சிக்ஸரை பதிவு செய்துள்ளார்.

PREV
16
6 போட்டிக்குப் பிறகு இப்படியொரு சாதனையை படைத்த டேவிட் வார்னர்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
டேவிட் வார்னர்

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 34 ஆவது போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணியில் பில் சால்ட் டக் அவுட்டானார்.

26
டேவிட் வார்னர்

மிட்செல் மார்ஷ் 25 ரன்களில் வெளியேறினார். வார்னர் 21, சர்ஃபராஸ் கான் 10, மணீஷ் பாண்டே 34, அக்‌ஷர் படேல் 34 என்று சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது.

36
டேவிட் வார்னர்

பின்னர், ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மாயங்க் அகர்வால் மட்டும் பொறுமையாக ஆடி 49 ரன்கள் சேர்த்தார். ஹென்ரிச் கிளாசன் 31 ரன்கள் சேர்த்து வெளியேறினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கடசியாக ஹைதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து தனது சொந்த மைதானத்தில் 7 ரன்களில் தோல்வி அடைந்தது.

46
டேவிட் வார்னர்

இதற்கு முன்னதாக டெல்லியில் நடந்த போட்டியில் ஹைதரபாத் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

56
டேவிட் வார்னர்

இந்த நிலையில், தான் இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றதோடு கேப்டன் டேவிட் வார்னர் முக்கிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். இதுவரையில் விளையாடிய 6 போட்டிகளில் 285 ரன்கள் குவித்துள்ளார். 

66
டேவிட் வார்னர்

ஆனால், இதில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. ஆனாலும், அவர் ஆரஞ்சு கேப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடங்களில் நீடித்துள்ளார். இவ்வளவு பெரிய மாஸ் நட்சத்திர வீரராக இருந்து, இதுவரையில் நடந்த 6 போட்டிகளில் அவர் ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் இருந்தது வருத்தமளிப்பதாக ரசிகர்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories