கொல்கத்தாவை விரட்டியடித்து நம்பர் ஒன் இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

First Published | Apr 24, 2023, 7:04 PM IST

கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு புள்ளிப்பட்டியலிலும் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.
 

சென்னை சூப்பர் கிங்ஸ்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 32ஆவது ஐபிஎல் போட்டி நடந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

இதில், டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் ஆடியது. ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தனர். இதில், கெய்க்வாட் 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கான்வே 56 ரன்களில் வெளியேறினார்.

Tap to resize

எம்.எஸ்.தோனி

இதையடுத்து ஜோடி சேந்த அஜின்க்யா ரஹானே மற்றும் ஷிவம் துபே இருவரும் இணைந்து கொல்கத்தா அணியினரின் பந்து வீச்சை தெறிக்கவிட்டனர். இதில் துபே  21 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் உள்பட 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

சிஎஸ்கே

அடுத்து வந்த ஜடேஜா 18 ரன்களில் வெளியேற கடைசியாக தல தோனி களமிங்கினார். அவர், 2 ரன்கள் எடுக்க கடைசி வரை களத்தில் இருந்த ரஹானே 29 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்தார். இதில் 5 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

இறுதியாக சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது. இதையடுத்து கடின இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஜேசன் ராய் 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

ரிங்கு சிங் 53 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் சேர்த்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம்

இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகள் பெற்று நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.

2. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது.

3. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - 8 புள்ளிகள்

4. குஜராத் டைட்டன்ஸ் - 8 புள்ளிகள்

5. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 8 புள்ளிகள்

6. பஞ்சாப் கிங்ஸ் - 8 புள்ளிகள்

7. மும்பை இந்தியன்ஸ் - 6 புள்ளிகள்

8. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 4 புள்ளிகள்

9. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 4 புள்ளிகள்

10. டெல்லி கேபிடல்ஸ் - 2 புள்ளிகள்

ஆரஞ்சு கேப் பட்டியல்:

ஆரஞ்சு கேப் பட்டியல்:

1. பாப் டூப்ளெசிஸ் - 405 ரன்கள் (அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் வைத்திருக்கிறார்)
2. டெவான் கான்வே - 314 ரன்கள்
3. டேவிட் வார்னர் - 285 ரன்கள்
4. விராட் கோலி - 279 ரன்கள்
5. ருத்துராஜ் கெய்க்வாட் - 270 ரன்கள்

பர்பிள் கேப் பட்டியல்:

பர்பிள் கேப் பட்டியல்:

1. முகமது சிராஜ் - 13 விக்கெட்டுகள்
2. அர்ஷ்தீப் சிங் - 13 விக்கெட்டுகள்
3. யுஸ்வேந்திர சகால் - 12 விக்கெட்டுகள்
4. ரஷீத் கான் - 12 விக்கெட்டுகள்
5. துஷார் தேஷ்பாண்டே - 12 விக்கெட்டுகள்

Latest Videos

click me!